“இதை கேட்டப் பிறகு நிச்சயம் வெளியேறி இருப்பார்கள்” – அதிமுகவை கிண்டலடித்த நிதியமைச்சர்!
பட்ஜெட் உரையின்போது அதிமுக வெளிநடப்பு:
தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று சட்டப்பேரவையில் பட்ஜெட் உரையை வாசிக்க தொடங்கியதும் அதிமுக உறுப்பினர்கள் பேச அனுமதி கோரி அமளியில் ஈடுபட்டனர். பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசலாம் இன்று சபாநாயகர் கூறியும், அமளியில் ஈடுபட்டனர். பின்னர் தங்களுக்கு பேச தங்களுக்கு அனுமதி வழங்காததால் தமிழ்நாடு அரசின் பட்ஜெட் உரையை புறக்கணித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
எடப்பாடி பழனிசாமி குற்றசாட்டு:
தமிழக பட்ஜெட் மக்களுக்கு ஏமாற்றமே, மக்களை ஏமாற்றும் வெத்துவேட்டு அறிக்கையாக பட்ஜெட் உள்ளது. கல்விக்கடன் தள்ளுபடி குறித்து பட்ஜெட்டில் அறிவிப்பு இல்லை. மகளிருக்கு உரிமைத்தொகையும் தள்ளிபோடப்பட்டுள்ளது என செய்தியாளர் சந்திப்பில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றசாட்டினார். இதனிடையே, அதிமுகவினர் வெளிநடப்பு செய்ததை தொடர்ந்து, சட்டப்பேரவையில் பட்ஜெட் உரையை நிதியமைச்சர் வாசித்து வந்தார்.
மீண்டும் பட்ஜெட் உரை:
அப்போது, பேசிய நிதியமைச்சர் இந்தாண்டு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறையை வலுப்படுத்தவும், கட்டமைப்பு, கூடுதல் பணியாளர்கள், வல்லுநர்களை பணியமர்த்துதல் போன்றவற்றிற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளன. வரும் ஆண்டில் இதுவரை இல்லாத அளவிற்கு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறையை வலுப்படுத்தும் பணிகளை அரசு தொடர்ந்து மேற்கொள்ளும்.
அதிமுகவை கிண்டலடித்த நிதியமைச்சர்:
நேர்மையான நிர்வாகத்தை மக்களுக்கு வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் அவர்களின் உறுதியான நிலைப்பாட்டினால் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என தெரிவித்தார். இதை கூறிய பின், சட்டப்பேரவையில் ஒருவேளை எதிர்க்கட்சிகள் (அதிமுகவினர்) வெளிநடப்பு செய்யாமல் அமர்ந்திருந்தால், ஊழல் தடுப்புத்துறை வலுப்படுத்தப்படும் என்ற அறிவிப்பை கேட்ட பிறகு நிச்சயம் வெளிநடப்பு செய்திருப்பார்கள் என கிண்டல் செய்தார் என்பது குறிப்பிடப்படுகிறது.