#BREAKING: முடிந்தது நிவர்; புதியதாக களமிறங்கும் “புரெவி” புயல்.!
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது, மேலும் அது புயலாக வலுப்பெறும் பட்சத்தில் அதன் பெயர் “புரெவி” என பெயர் சூட்டப்படும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவானது. இந்நிலையில், அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறும் எனவும் 48 மணி நேரத்தில் புயலாக மாறவும் வாய்ப்பு இருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழக பகுதியை நோக்கி நாளை மறுநாள் தமிழகம் நோக்கி நகரும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியது. அந்த வகையில், இந்த புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் டிசம்பர் 1 முதல் 3ம் தேதி வரை தமிழகத்தில் கனமழை பெய்ய கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.