அபுதாபி:முதல்வர் ஸ்டாலின் அவர்கள்,அமீரக தொழில் மற்றும் நவீன தொழில்நுட்பத் துறை அமைச்சர் சுல்தான் பின் அகமதுவை தற்போது சந்தித்துள்ளார்.
துபாய் பயணத்தை முடித்துக் கொண்டு அபுதாபி சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின் அவர்கள்,அமீரக தொழில் மற்றும் நவீன தொழில்நுட்பத் துறை அமைச்சர் சுல்தான் பின் அகமதுவை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.முதல்வருடன் தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசும் கலந்து கொண்டுள்ளார்.
தமிழகத்திற்கு புதிய முதலீடுகள் கொண்டு வருவது தொடர்பாக முதல்வர் ஆலோசனை மேற்கொண்டதாக தகவல் வெளியாகியது.பின்னர்,அபுதாபியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ரூ.3,500 கோடி முதலீட்டில் 3 திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது .இதனிடையே,அமீரக அமைச்சருக்கு “JOURNEY OF CIVILIZATION” என்ற புத்தகத்தை முதல்வர் வழங்கியுள்ளார்.
இதனையடுத்து,அபுதாபியில் இன்று மாலை வெளிநாடுவாழ் தமிழர்கள் நடத்தக்கூடிய பாராட்டு விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பங்கேற்கவுள்ளார்.இதனைத் தொடர்ந்து,நாளை காலை முதல்வர் சென்னை திரும்புகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. சென்னை…
சென்னை : கத்தோலிக்க சபையின் 266-வது திருத்தந்தையாக 2013 மார்ச் 13 முதல் பதவி வகித்த போப் பிரான்சிஸ் கடந்த…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ்…
சென்னை : இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மாவட்ட…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில்…