என்னை மறக்காமல் இருந்த தமிழ் உள்ளங்களுக்கு நன்றி.! – விடுதலையான நளினி மகிழ்ச்சி.!
இத்தனை வருடங்கள் என்னை மறக்காமல் இருந்த தமிழ் உள்ளங்களுக்கு நன்றி என விடுதலையான நளினி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி 31 ஆண்டுகள் சிறையில் இருந்த நளினி, முருகன், சாந்தன், ஜெயக்குமார், ரவிசந்திரன், ராபர்ட் பயாஸ் ஆகிய 6 பேர் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி விடுதலை செய்யப்பட்டனர்.
வேலூர் மகளிர் தனிசிறையில் இருந்த நளினி இன்று விடுதலையானார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இஇதனை வருடம் என்னை மறக்காமல் இருந்த தமிழ் உள்ளங்களுக்கு எனது நன்றிகள் என உற்சாகத்துடன் கூறினார். மேலும், மத்திய, மாநில அரசுகளுக்கும் தனது நன்றியை தெரிவித்தார் நளினி.