எல்லாரும் மதுக்கடையை திறந்த பின் நாம் திறக்காமல் இருக்க முடியாது அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸின் தீவிர பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில், இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், அனைத்து கடைகளும் மூடப்பட்ட நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகியுள்ளது.
இந்நிலையில், ஊரடங்கு உத்தரவானது மே மாதம் 17-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், மக்களின் நலனை கருத்தில் கொண்டு, சில தளர்வுகளுடன், சில கடைகள் திறக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை ஒட்டியுள்ள கர்நாடகா, ஆந்திரா போன்ற அண்டை மாநிலங்களில் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டுள்ளதால், தமிழக மக்கள் அதிகமாக அங்கு செல்வதாக தமிழக அரசு கூறியுள்ளது.
மாநிலங்களுக்கு இடையேயான மக்கள் நடமாட்டத்தை குறைக்கும் வண்ணம், வரும் 7-ம் தேதி முதல் தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகள் நிபந்தனைகளுடன் செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள மதுபானக் கடைகள் திறக்கப்பட மாட்டாது என அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
தமிழக அரசின் இந்த முடிவுக்கு, ஸ்டாலின், ராமதாஸ், திருமாவளவன், டிடிவி தினகரன், ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன், வைகோ, வேல்முருகன் போன்ற கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.
அவர் கூறுகையில், எல்லாரும் மதுக்கடையை திறந்த பின் நாம் திறக்காமல் இருக்க முடியாது என்றும், குடிமகன்கள் மற்றும் பொருளாதாரம் பாதிக்கப்பட கூடாது என்பதற்காக தான் டாஸ்மாக் கடையை திறக்க முதல்வர் முடிவு செய்தார் என்றும் கூறியுள்ளார்.
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…