சென்னை: குற்றாலம் பழைய அருவியில் நீர்வரத்து சீரானதால் குளிப்பதற்கு சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலம் அருவிகளான பேரருவி, ஐந்தருவி, சிற்றருவி, பாலருவி, புலியருவி, பழத்தோட்ட அருவி, செண்பகாதேவியருவி, பழையகுற்றால அருவி, தேனருவிகளில் சுற்றுலாப் பயணிகள் பலரும் குளித்து மகிழ்வது வழக்கம்.
ஆனால், இங்கு எப்போது வெள்ளம் வருவது என சொல்ல முடியாது. மேற்குத் தொடர்ச்சி மலைகளில் கடந்த சில நாட்களாக பெய்த காரணமாக, கடந்த 17ம் தேதி திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில், சிக்கி 17 வயது சிறுவன் அஸ்வின் பலியானதை தொடர்ந்து குற்றால அருவிகளில் தடை விதிக்கப்பட்டது.
தற்போது, மழையின் அளவு குறைந்துள்ளதால் 7 நாட்களுக்கு பின் தடை நீக்கப்பட்டு சுற்றுலா பயணிகள் குளிக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. குற்றால மெயின் அருவியில் பராமரிப்பு வேலைகள் நடைபெற்று வருவதால் இன்று மாலை 4.30 மணிக்கு பிறகு, அருவியில் குளிக்க அனுமதி வழங்க உள்ளதாக மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர் தெரிவித்துள்ளார்.
அதேபோல பழைய குற்றால அருவியில் இன்று காலை முதல் மாலை வரை குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பழைய குற்றால அருவி பகுதியில் பாதுகாப்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,…
கன்னியாகுமரி : கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டுடி சம்பர் 3ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து…
சென்னை : இயக்குனர் பாலா 'வணங்கான் ' என்ற படத்தை இயக்கி வருகிறார். 'வணங்கான்' படத்திலிருந்து சூர்யா விலகிய பிறகு,…
தூத்துக்குடி : முருகனின் அறுபடை வீடுகளில் 2வது புண்ணிய தலமாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில். இங்கு நாள்தோறும்…
சென்னை : சென்னையில் சிக்னல்கள் மற்றும் மேம்பாலங்களின் அருகே உள்ள 100க்கும் மேற்பட்ட பேருந்து நிறுத்தங்களை 100 மீட்டர் தள்ளி…
திருச்சி : 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் , தங்கள் கட்சி கூட்டணி பற்றிய கேள்விகள் குறித்தும், திமுக, பாஜக…