ஒரு வார தடைக்கு பிறகு, குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி.!

Courtallam Falls

சென்னை: குற்றாலம் பழைய அருவியில் நீர்வரத்து சீரானதால் குளிப்பதற்கு சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலம் அருவிகளான பேரருவி, ஐந்தருவி, சிற்றருவி, பாலருவி, புலியருவி, பழத்தோட்ட அருவி, செண்பகாதேவியருவி, பழையகுற்றால அருவி, தேனருவிகளில் சுற்றுலாப் பயணிகள் பலரும் குளித்து மகிழ்வது வழக்கம்.

ஆனால், இங்கு எப்போது வெள்ளம் வருவது என சொல்ல முடியாது. மேற்குத் தொடர்ச்சி மலைகளில் கடந்த சில நாட்களாக பெய்த காரணமாக, கடந்த 17ம் தேதி திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில், சிக்கி 17 வயது சிறுவன் அஸ்வின் பலியானதை தொடர்ந்து குற்றால அருவிகளில் தடை விதிக்கப்பட்டது.

தற்போது, மழையின் அளவு குறைந்துள்ளதால் 7 நாட்களுக்கு பின் தடை நீக்கப்பட்டு சுற்றுலா பயணிகள் குளிக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. குற்றால மெயின் அருவியில் பராமரிப்பு வேலைகள் நடைபெற்று வருவதால் இன்று மாலை 4.30 மணிக்கு பிறகு, அருவியில் குளிக்க அனுமதி வழங்க உள்ளதாக மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர் தெரிவித்துள்ளார்.

அதேபோல பழைய குற்றால அருவியில் இன்று காலை முதல் மாலை வரை குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பழைய குற்றால அருவி பகுதியில் பாதுகாப்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

LIve 2 - BJP - TVK
muthu (9) (1)
Natarajan - CSK
Kailash Gahlot
Seeman - DMK
edappadi - vijay
Ragging Death in Gujarat