8 நாட்களுக்கு பிறகு வெற்றி துரைசாமி உடல் மீட்பு..!
சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயரான சைதை துரைசாமி அவர்களின் மகனான வெற்றி துரைசாமியின் கார் கடந்த நான்காம் தேதி, ஞாற்றுகிழமை அன்று விபத்துக்குள்ளானது. அன்று ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள கின்னூர் மாவட்டத்தில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலையில் கார் ஒன்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள சட்லஜ் எனும் நதியில் விழுந்து விபத்துக்குள்ளானது.
சட்டப்பேரவையில் இருந்து வெளியேறியது ஏன்? ஆளுநர் விளக்கம்..!
சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி அவரது நண்பரான கோபிநாத்துடன் தனது படத்திற்காக லொகேஷன் பார்க்க இமாச்சல் பிரதேசம் சென்றிருந்தார். அங்கு கார் ஒன்றை வாடகைக்கு எடுத்து லொகேஷன் பார்க்க புறப்பட்டனர். அப்போது, கார் ட்ரைவர் டென்சினிக்கு திடிரென மாரடைப்பு ஏற்பட்டதால் கார் கட்டுப்பாட்டை இழந்து சட்லஜ் நதியில் விழுந்து விபத்துத்துக்குள்ளானது.
சுமார் 200 அடி உயரத்தில் இருந்து விழுந்ததில் கார் ட்ரைவர் டென்சின் அன்றே சடலமாக மீட்கப்பட்டார். பின் அதிலிருந்த வெற்றியின் நண்பரான கோபிநாத் என்பவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு இந்திரா காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மறுபக்கம் வெற்றியை தேடும் பணி நடந்து கொண்டே இருந்தது.
இந்நிலையில், அவரை தேடும் பொழுது அவரது ஐபோன் மற்றும் அவரது உடமைகள் எல்லாம் கிடைத்திருந்தது. அருகில் உள்ள பாறை ஒன்றில் மூளையின் திசுக்கள் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், இந்தோ திபத்திய வீரர்கள், ராணுவ படை வீரர்கள் என கிட்டத்தட்ட 100 வீரர்கள் இந்த தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர். அதன் பிறகு மீட்பு பணியின் 6 வது நாளில் நீச்சல் திறன் கொண்ட கடற்படையினரும் இணைந்து தேடி வந்தனர்.
தற்போது 9 வது நாளான இன்று விபத்து நடந்ததில் இருந்து 2 கி.மீ தொலைவில் சட்லெஜ் நதிக்கரையில் அவரது உடலானது கண்டெடுக்கப்பட்டு உள்ளது. ஸ்கூபா நீச்சல் வீரர்களால் மீட்கப்பட்டுள்ளது என தகவல்கள் வந்துள்ளது. கண்டெடுக்கப்பட்ட அவரது உடலை அங்குள்ள உள்ள காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
பிரேத பரிசோதனை முடிவடைந்த உடன் அவரது உடல் சென்னைக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும், தகவல் தெரிந்த வெற்றியின் தந்தையும், சென்னையின் முன்னாள் மேயருமான சைதை துரைசாமி அவர்கள் சென்னையிலிருந்து புறப்பட உள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.