70 ஆண்டுகளுக்கு பின் அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி..!
70 ஆண்டுகளுக்கு பின் அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 2 நாள் பயணமாக சென்னைக்கு வருகை புரிந்துள்ளார். நேற்று சென்னை வந்த அவர், செஸ் ஒலிம்பியாட் விழாவில் கலந்துகொண்டார்.
இதனை தொடர்ந்து தற்போது பிரதமர் மோடி அண்ணா பல்கலைக்கழக 42-வது பட்டமளிப்பு விழாவில் கலந்து தலைமை விருந்தினராக கலந்து கொண்டுள்ளார். இந்த விழாவில் 69 மாணவர்களுக்கு தங்க பதக்கம் மற்றும் சான்றிதழை வழங்கவுள்ளார். 70 ஆண்டுகளுக்கு பின் அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பிரதமர் கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விழாவில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் எல்.முருகன், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த விழாவில் பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், பிரதமர் மோடிக்கு திருவள்ளுவர் சிலையை பரிசாக வழங்கியுள்ளார். உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வரவேற்புரை ஆற்றிய நிலையில், தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்கு பிரதமர் நரேந்திர மோடி உறுதுணையாக இருக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தது உரையை நிறைவு செய்துள்ளார்.