60 ஆண்டுகளுக்கு பிறகு சீன அதிபர் தமிழகம் வருவது மகிழ்ச்சி- கமல்
60 ஆண்டுகளுக்கு பிறகு சீன அதிபர் தமிழகம் வருவது மகிழ்ச்சி என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் தெரிவித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் செய்தியாளர்களிடம் பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில், சீன அதிபர் தமிழகம் வருவது வரவேற்கத்தக்கது. 60 ஆண்டுகளுக்கு பிறகு சீன அதிபர் தமிழகம் வருவது மகிழ்ச்சி.
சீன அதிபருடனான சந்திப்பை திறமையாக கையாள பிரதமர் மோடிக்கு வாழ்த்துகள்.சீன அதிபரின் வருகையை வெற்றி விழாவாக மாற்றுவது நம் கடமை .பேனரை எதிர்க்கவில்லை. சட்டப்பூர்வ அனுமதி பெற்ற இடங்களில் பேனர் வைக்கலாம்.அனைத்து நல்ல காரியங்களும் அரசால் மட்டுமே நடைபெறுவது இல்லை.மேலும் தமிழகத்திற்கு வருவோரை வரவேற்க வேண்டும், பிடிக்கவில்லை என்பதற்காக ‘கோ பேக்’ எனக்கூறி திருப்பி அனுப்ப வேண்டாம் என்று தெரிவித்தார்.