சென்னையில் 47 ஆண்டுகளுக்கு பின் பெருமழை.. கடந்த 24 மணிநேரத்தில் 34 செ.மீ..
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் அதி கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. நேற்று முதல் விடிவிடிய கனமழை பெய்து வருவதால் சென்னை பல்வேறு பகுதியில் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கி சென்னையே மலையில் தத்தளித்து வருகிறது.
இந்த மிக்ஜாம் புயல் வட தமிழகம், தெற்கு ஆந்திர பகுதியில் நிலை கொண்டுள்ளது. சென்னைக்கு தென்கிழக்கே 110 கி.மீ. தொலைவில் இருக்கும் மிக்ஜாம் புயல், நெல்லூர் – மசூலிப்பட்டினம் இடையே நாளை முற்பகலில் தீவிர புயலாக கரையை கடக்கிறது. மிக்ஜாம் புயல் இன்று முற்பகல் தீவிர புயலாக வலுப்பெறும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இதனால், பொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்கவும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பாதுகாப்பாகவும் இருக்குமாறு வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது. இந்த புயல் எதிரொலியால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் விடாமல் அதி கனமழை பெய்து வருகிறது.
சென்னையில் கனமழை..! தரையில் இறங்கிய அடுக்குமாடி கட்டடம்..!
இதில் குறிப்பாக சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், வேளச்சேரி, மேற்கு தாம்பரம் செல்லக்கூடிய சாலைகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று, பல்வேறு இடங்களில் சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. கார்கள் எல்லாம் தண்ணீர் அடித்து செல்லும் காட்சியும் வெளியாகியுள்ளது.
கனமழையால் பொதுமக்களின் இயல்வு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது, தவித்து வருகிறார்கள். இந்த நிலையில், சென்னையில் 47 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 34 செமீ மழை பதிவாகியுள்ளது. 1976ம் ஆண்டு ஒரே நாளில் 47 செ.மீ மழை பதிவாகி இருந்த நிலையில், தற்போது இன்று காலை வரை அதாவது கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் 34 மழை பதிவாகியுள்ளது என சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.
கடந்த 2015ல் பெரும் வெள்ளம் ஏற்பட்டபோது 33 செ.மீ மழை பெய்திருந்த நிலையில், தற்போது அதைவிட அதிகமாக 34 செ.மீ மழை பொழிந்துள்ளது. மேலும், சென்னையில் இரவுக்கு பிறகு படிப்படியாக மழை குறையும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கூறியுள்ளார். சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் என படிப்படியாக இரவுக்கு பிறகு மலை குறையும் எனவும் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
#GCC requests you all to stay indoors.
There was extreme rainfall, a total of 340mm till today early morning.Please write to us in case of food requirements.#Michaung#ChennaiRain#ChennaiCorporation #HeretoServe pic.twitter.com/du8LzfmnGB
— Greater Chennai Corporation (@chennaicorp) December 4, 2023