நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்துக்கு பயணிகள் சொகுசு கப்பல் போக்குவரத்து சேவை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இவ்விழாவில் மத்திய துறைமுகம் மற்றும் நீர்வழிப்பாதை துறை அமைச்சர் சர்பானந்தா சோனாவால், தமிழக அமைச்சர்கள் ரகுபதி, எ.வ.வேலு, நாகை எம்.பி. செல்வராஜ் ஆகியோர் பங்கேற்று, சொகுசு கப்பல் போக்குவரத்து சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், இலங்கை துறைமுகங்கள் துறை அமைச்சர் காணொலி மூலம் பங்கேற்றனர். அக்.12ல் தொடங்கவிருந்த கப்பல் போக்குவரத்துக்கு, நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று தொடங்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்குப் பிறகு நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்கு செல்லும் பயணிகள் கப்பல் சேவை இன்று தொடங்கியுள்ளது.
நாகை துறைமுகத்திற்கு அக்.7ம் தேதி சொகுசு கப்பல் வந்தடைந்த நிலையில், அக்.9ல் சோதனையோட்டம் நடைபெற்றது. 40 ஆண்டுகளுக்கு பின் தொடங்கும் இந்த சொகுசு கப்பல் போக்குவரத்துக்கு சேவை மூலம் நாகையில் இருந்து காங்கேசன் துறைக்கு 3 மணி நேரத்தில் செல்லலாம். அதன்படி, நாகையில் இருந்து இலங்கை செல்ல 18% ஜிஎஸ்டி சேர்த்து ஒரு நபருக்கு ரூ.7,670 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
150 பேர் பயணிக்கு கப்பலில் முதல் நாள் பயணத்துக்காக 50 பேர் முன்பதிவு செய்துள்ளனர். பயணி ஒருவர் 50 கிலோ எடை கொண்ட பொருட்களை எடுத்து செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த சுகுசு கப்பலுக்கு “செரியபாணி” என பெயர் சூட்டப்பட்டுள்ளது. மேலும், நாகை – இலங்கை இடையேயான பயணிகள் கப்பல் சேவை தொடக்க விழா நிகழ்ச்சியில் காணொளியில் பங்கேற்று பிரதமர் நரேந்திர மோடி சிறப்புரையாற்றினார்.
சென்னை : குட் நைட் என்ற அருமையான படத்தை கொடுத்து மக்கள் மனதில் இடம்பிடித்த மணிகண்டன் அடுத்ததாக மீண்டும் அதைப்போல ஒரு…
சென்னை :மணப்பட்டி சிக்கன் சுக்கா அசத்தலான சுவையில் செய்வது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருட்கள்; சிக்கன்- ஒரு கிலோ…
சென்னை : கடந்த ஜனவரி 16ஆம் தேதியன்று சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் சர்வதேச புத்தக காட்சித் திருவிழா நடைபெற்றது. …
டெல்லி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி அதற்கு அடுத்த மாதமான மார்ச் 9ஆம்…
சென்னை : தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி உள்ள நிலையில், வரும் 2026…
மஞ்சிஸ்டா மூலிகை பொடியை வைத்து முகப்பரு ,கரும்புள்ளி மறையை செய்து முக பொலிவை அதிகரிப்பது எப்படி என பார்க்கலாம் .…