நாளை காலை 10.30 மணிக்கு சசிகலா விடுதலையாகிறார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய 3 பேருக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது.பின்னர், 2017-ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர்.சசிகலா உள்ளிட்ட 3 பேரின் தண்டனை காலம் வரும் பிப்ரவரி மாதம் முடிவடைகிறது.பின்பு அபராதத்தை செலுத்தினால் சசிகலா ஜனவரி 27-ஆம் தேதி விடுதலை செய்யப்படுவார் என்று அண்மையில் சிறை நிர்வாகம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.அதன்படி அபராதமும் செலுத்திவிட்டார்.
சிறையில் இருந்த சசிகலாவுக்கு கடந்த 20- ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக அவர் பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையின் தீவிர சிகிக்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அப்போது, சசிகலாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.இதனால், சசிகலா விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இந்நிலையில் 4 ஆண்டுகால சிறைவாசத்தில் இருந்து நாளை காலை 10.30 மணிக்கு சசிகலா விடுதலையாகிறார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, மத்திய அரசு தற்போது கடுமையான நிலைப்பாட்டை எடுத்து வருகிறது. நேற்றைய தினம்…
சூரத்: பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து ஒவ்வொரு துறையிலும் தனது பலத்தை அதிகரிப்பதில் இந்தியா தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. வாகா…
டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில், இந்த தாக்குதலை அடுத்து இந்தியா -…
காந்திநகர் : நேற்று முன்தினம் காஷ்மீர் மாநிலம் அனந்த்நாத் மாவட்டத்தில் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய…
காஷ்மீர் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு தான் பொறுப்பல்ல என்று லஷ்கர்-இ-தொய்பா (LeT) துணைத் தலைவர் சைஃபுல்லா…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, புது டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அலுவலகத்தை நோக்கி ஒரு நபர்…