23 ஆண்டுகளுக்கு பிறகு கோலாகலமாக நடைபெற்ற தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு திருவிழா.!

Default Image
  • 23 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு திருவிழா தமிழ், சமஸ்கிருதம் ஆகிய இரு மொழியில் வெகுவிமர்சியாக நடைபெற்றது. தமிழகத்தில் இருந்து ஏராளமான பகதர்கள் கலந்துகொண்டு சாமியின் தரிசனம் பெற்றனர்.
  • குடமுழுக்கையொட்டி மாவட்டம் நிர்வாகம் முன் ஏற்பாடுகளை செய்துள்ளது. இதில் கூட்ட நெரிசலையொட்டி, குழந்தைகளின் பாதுகாப்பிற்காக அவர்களின் கைகளில் அடையாள பட்டை அணிவிக்கப்பட்டது.

தஞ்சை பெரிய கோவிலில் 23 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு திருவிழா வெகுவிமர்சியாக நடைபெற்றது. தமிழ் மற்றும் சம்ஸ்கிருதம் ஆகிய இரு மொழிகளில் நடைபெற்ற குடமுழுக்கு திருவிழாவை தமிழகத்தில் இருந்து ஏராளமான பகதர்கள் கலந்துகொண்டு சாமியின் தரிசனம் பெற்றனர். இந்தியாவிலேயே 29 பாரம்பரிய சின்னங்களில் தஞ்சை பெரிய கோவிலும் இருக்கிறது. இக்கோவிலில் 8-வது கால யாக பூஜையுடன் காலை 4.30 மணிக்கு குடமுழுக்கு திருவிழா தொடங்கியது. இதையடுத்து காலை 7 மணியளவில் பூர்ணாஹீதி, தீபாராதனை மற்றும் யாத்ரா தானம் நடைபெற்றது. பின்னர் காலை 7.25 மணியளவில் திருக்கலசங்கள் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து புனித நீர் நிரப்பப்பட்ட கலசங்கள் கோபுரத்தின் உச்சிக்கு எடுத்து செல்லப்பட்டன.

இதையடுத்து மந்திரங்கள் ஓதப்பட்டு, ராஜகோபுரத்தின் கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டடு, குடமுழுக்கு கோலாகலமாக நடைபெற்றது. பின்னர் கோவிலின் அனைத்து இடங்களிலும் தமிழ், சமஸ்கிருதம் ஆகிய இரு மொழிகளில் மந்திரங்கள் ஓதப்பட்டது. இதனிடையே கலசத்தில் புனிதநீர் ஊற்றுமோது கோவிலை சுற்றியிருந்த ஏராளமான பக்தர்கள் ஓம் நமசிவாய என கூச்சலிட்டு பக்தி பரவசத்தை வெளிப்படுத்தினர். தொடர்ந்து கலசத்திற்கு தீபாராதனை காட்டப்பட்டதோடு, தீர்த்த நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. குறிப்பாக குடமுழுக்கின் போது கோபுரத்தின் மேலே கருடபிரான் வட்டமிட்டது. இதனை பார்த்து பக்தர்கள் கருடனை வழிபட்டனர். ராஜகோபுரத்தை தொடர்ந்து விநாயகர், முருகன், பெரியநாயகி, அம்மன், வராகி, சண்டிகேஸ்வரர் விமானங்களுக்கு குடமுழுக்கு நடந்தது.

இந்நிலையில், தஞ்சை பெரிய குடமுழுக்கையொட்டி மாவட்டம் நிர்வாகம் முன் ஏற்பாடுகளை செய்துள்ளது. இதில் கூட்ட நெரிசலையொட்டி, குழந்தைகளின் பாதுகாப்பிற்காக அவர்களின் கைகளில் அடையாள பட்டை அணிவிக்கப்பட்டது. மக்களின் வசதிக்காக தாற்காலிய பேருந்து நிலையங்கள், பேருந்து நிறுத்தங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவில் சுமார் 5000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் பக்தர்கள் வசதிக்காக குடிநீர் சுகாதார வசதிகள் செய்யப்பட்டுள்ளது. தமிழர் கட்டடக் கலை பெருமையை உலகுக்கு கூறும் தஞ்சை கோவில் குடமுழுக்கையொட்டி வண்ண விளக்குகளால் ஜொலித்தது. இதைத்தொடர்ந்து கோவிலில் பல சிறப்பம்சங்கள் நடைபெறவுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Live - 18042025
TVK Meeting
upi gst over 2000
Actor Bobby Simha car accident
durai vaiko and vaiko
mk stalin tamilisai soundararajan
Trichy MP Durai Vaiko