16 ஆண்டுகளுக்கு பிறகு ஹாக்கி.! அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு.!
2023-க்கான ஆசிய ஹாக்கி போட்டி சென்னையில் நடைபெறும் என அமைச்சர் உதயநிதி அறிவிப்பு.
சர்வதேச ஹாக்கி போட்டி நாடு முழுவதும் உள்ள பல்வேறு நகரங்களுக்கு எடுத்துச் செல்லும் முயற்சியில், இந்த முறை வரவிருக்கும் ‘Asian Champion Trophy’ 2023-க்கான ஆசிய ஹாக்கி போட்டி, சென்னையில் நடைபெற இருக்கிறது.
சென்னையில் 2007-க்கு பிறகு 16 ஆண்டுகள் கழித்து ஆசிய ஹாக்கி போட்டி நடைபெறவுள்ளதாக உதயநிதி அறிவித்துள்ளார். சென்னை மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில், ஆகஸ்ட் 3-ம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை ஆசிய ஹாக்கி போட்டி நடைபெறும்.
இந்த போட்டியில் ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த அணியினர் கலந்து கொள்கின்றனர் என்று தெரிவித்துள்ளார். மேலும், இந்த போட்டியில் மாபெரும் வெற்றியடைய முதல்வர் மு.க.ஸ்டாலின் அனைத்து உதவிகளையும் வழங்க இருக்கிறார்.