அண்ணாமலை ஆளுநருக்கு வக்காலத்து வாங்குவது “எங்கப்பன் குதிருக்குள் இல்லை” என்பது போல் உள்ளது – .பாலகிருஷ்ணன்
அண்ணாமலை ஒன்றும் ஆளுநரின் செயலாளரோ, செய்தி தொடர்பாளரோ அல்ல என கே.பாலகிருஷ்ணன் ட்வீட்.
இன்று காலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ஆளுநர் மாளிகையில் ஆளுநரை ரஜினி சந்தித்ததில் என்ன தவறு இருக்கிறது?, ஆளுநரிடம் அரசியல் பேசினேன் என்று ரஜினி தெரிவித்ததால் என்ன தவறு எனவும் அண்ணாமலை கேள்வி எழுப்பி இருந்தார்.
இதுகுறித்து கே.பாலகிருஷ்ணன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தமிழக ஆளுநரை திரு ரஜினிகாந்த் அவர்கள் சந்தித்துள்ளார். அவர் யாரை வேண்டுமானாலும் சந்தித்து பேச உரிமையுள்ளது. அத்தகைய சந்திப்பை சிபிஐ (எம்) கேள்வியெழுப்பவில்லை. அதேசமயம், “நாங்கள் அரசியல் பேசினோம்; ஆனால் அதை உங்களிடம் பகிர்ந்து கொள்ள முடியாது” என ரஜினிகாந்த் அவர்கள் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
“பகிரங்கமாக பகிர்ந்து கொள்ள முடியாத” அளவுக்கு பேசிய அரசியலின் மர்மம் என்ன? ஆளுநர் அரசியல்வாதியாகவும், ஆளுநர் மாளிகையை அரசியல் கட்சி அலுவலகமாகவும் மாற்றுவது அரசியல் சட்டத்திற்கு விரோதமானது என்பதையே சிபிஐ (எம்) கேள்விக்குள்ளாக்கியது.
இக்கேள்விக்கு ஆளுநரோ, ஆளுநர் அலுவலகமோ பதில் அளித்திருக்க வேண்டுமே தவிர, முந்திரிக்கொட்டையைப் போல் முந்திக்கொண்டு அண்ணாமலை பேட்டியளிக்க எந்த அவசியமுமில்லை. அண்ணாமலை ஒன்றும் ஆளுநரின் செயலாளரோ, செய்தி தொடர்பாளரோ அல்ல;
அப்படியிருக்கும் போது வரிந்துகட்டிக் கொண்டு அண்ணாமலை ஆளுநருக்கு வக்காலத்து வாங்குவது “எங்கப்பன் குதிருக்குள் இல்லை” என்பது போல் உள்ளது.
அதன் தலைவராக இருக்கும் அண்ணாமலைக்கு கம்யூனிஸ்ட்டுகளை விமர்சிப்பதற்கு எவ்வித அருகதையும் இல்லை. மக்கள் செல்வாக்கை பெற முடியாமல் புறக்கடை வழியாக ஆளுநர் மூலம் அரசியல் செய்ய முயற்சிக்கும் பாஜகவின் எண்ணம் பகல் கனவாகவே முடியும்.
– கே. பாலகிருஷ்ணன்
மாநில செயலாளர்— கே.பாலகிருஷ்ணன் – K Balakrishnan (@kbcpim) August 10, 2022