சென்னையில் மழைநீர் தேங்குவதை தடுக்க ஆலோசனைக்குழு – அரசாணை வெளியீடு
சென்னையில் மழைநீர் தேங்குவதை தடுக்க ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி திருப்புகழ் தலைமையில் ஆலோசனைக்குழு அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில், பல மாவட்டங்களில் சாலைகளில் மழைநீர் தேங்கிய நிலையில், சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளித்தது. மேலும், வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால், மக்களின் இயல்புவாழ்க்கை பெரும் பாதிப்புக்கு உள்ளானது.
குறிப்பாக, கனமழை காரணமாக சென்னையில் பெருமளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், தாழ்வான பகுதிகள் மற்றும் சாலைகளில் மழைநீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. மேலும் பல வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்துள்ளது.
இந்நிலையில், இந்த பாதிப்புகளை சரி செய்ய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, சென்னையில் மழைநீர் தேங்குவதை தடுக்க ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி திருப்புகழ் தலைமையில் ஆலோசனைக்குழு அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
சென்னையில் மழைநீர் தேங்குவதை தடுக்க ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி திருப்புகழ் தலைமையில் ஆலோசனைக்குழு – தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு.. pic.twitter.com/yvNkhrCkCp
— Karthigaichelvan S (@karthickselvaa) November 13, 2021