அண்ணாமலை இல்லாமல் ஆலோசனை! அதிமுகவுடன் பேச்சுவார்த்தையா? – விபி துரைசாமி பேட்டி

VP DURAISAMY

பாஜக மாநில தலைவர் அண்ணாமலையுடனான கருத்து மோதலால் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த கூட்டணி முறிவு பாஜக தலைமைக்கு பேரிடியாக அமைந்தது. கணிசமான இடங்களில் வெற்றி பெற என்று நினைத்து வந்த நிலையில், பாஜகவை அதிமுக கழட்டிவிட்டது. இந்த கூட்டணி முறிவுக்கு பிறகு இரு கட்சி தலைவர்களும் மவுனம் காத்து வந்தனர். இதனால், அதிமுக – பாஜக கூட்டணி முறிவு நிரந்தரமா? அல்லது தேர்தலில் நேரத்தில் மீண்டும் ஒன்று சேருமா? என கேள்வி எழுந்தது.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அதிமுக முன்னாள் அமைச்சர் கேபி முனுசாமி கூறுகையில், பாஜகவுடன் இனி கூட்டணி இல்லை, வரும் தேர்தலில் புதிய கூட்டணி அமைத்து அதிமுக களமிறங்கும் என திட்டவட்டமாக தெரிவித்தார். இருப்பினும், பாஜக தரப்பில் இருந்து இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை, பாஜக மேலிடம் கூறிய பிறகு, கூட்டணி முறிவு குறித்து கருத்து தெரிவிக்கிறோம் என தெரிவித்தனர்.

இதனைத்தொடர்ந்து, அதிமுக தேர்தலுக்கான பணியில் ஈடுபட்டு வருகிறது. மறுபக்கம், கூட்டணி முறிவை தொடர்ந்து, மத்திய நிதியமைச்சர் தமிழகம் நிலவரம் குறித்தும், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்தும் ஆய்வு மேற்கொண்ட அறிக்கையை மேலிடத்தில் சமர்ப்பித்தார். அதே சமயத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார்.

அப்போது, பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா, உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்து பேசியுள்ளார். இதனிடையே, சென்னையில் அண்ணாமலை தலைமையில் பாஜக உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், டெல்லியில் இருந்து இன்னும் சென்னை திரும்பாததால் ஆலோசனை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இந்த சூழலில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இல்லாமல் சென்னை நிர்வாகிகள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.  கூட்டத்தில் பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.

அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய மாநில துணை தலைவர் விபி துரைசாமி, அதிமுக – பாஜக கூட்டணி நீடிக்கும் என்றும் இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடப்பதாகவும் கூறியுள்ளார். இதுபோன்று, அதிமுக கூட்டணி பற்றிய கேள்விக்கு, தேவையான நேரத்தில் பதிலளிக்கப்படும் என்றும் அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி தேசிய தலைமை முடிவெடுக்கும் எனவும் மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி விளக்கமளித்துள்ளார்.

எனவே, இதனை பார்க்கும்போது அதிமுகவுடன் மீண்டும் பாஜக கூட்டணி அமைக்குமா? மாநில தலைவர் பதிவில் இருந்து அண்ணாமலை மாற்றப்படுவாரா என கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால், மாநில தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலையை நீக்கினால் மட்டுமே பாஜகவுடன் கூட்டணி என அதிமுக ஏற்கனவே கோரிக்கை வைத்ததாக தகவல் வெளியாகியிருந்தது. ஆனால், இதுபோன்ற கோரிக்கை வைக்கவில்லை என கேபி முனுசாமி கூறியிருந்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live tn
Yashasvi Jaiswal
Encounter tn
rohit sharma about mi
Anant Ambani Chicken
Kachchatheevu - MKStalin
K. C. Venugopal