நீட் தேர்வுக்கு பள்ளிகள் மூலம் விண்ணப்பிக்க அறிவுரை – பள்ளிக்கல்வித்துறை
அரசு பள்ளி மாணவர்கள் அவரவர் பள்ளிகள் வாயிலாக நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புக்கு, நீட் நுழைவு தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. நடப்பு கல்வியாண்டியில் பிளஸ் 2 தேர்வு நடத்தப்படாத நிலையில், நீட் தேர்வு வருகிற செப்டம்பர் மாதம் 12ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்த நிலையில், அரசு பள்ளி மாணவர்கள் அவரவர் பள்ளிகள் வாயிலாக நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களை ஒன்றிணைத்து பிழையின்றி விண்ணப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.
மேலும், உரிய நடைமுறைகளை பின்பற்றி ஆக.6க்குள் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. நீட் தேர்வுக்கு ஜூலை 16ம் தேதி முதல் ஆன்லைன் விண்ணப்ப பதிவு நடந்து யாரும் நிலையில், தற்போது பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.