சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி தருவது குறித்து முதல்வருடன் ஆலோசனை.!
படப்பிடிப்புகளுக்கு அனுமதி தருவது குறித்து முதல்வருடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி தருவது குறித்து முதல்வர் பழனிசாமியிடம் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். திரைப்படங்களின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளுக்கு அனுமதியளிப்பது பற்றியும் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் எனவும் அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார். இதனிடையே கொரோனா தீவிரம் காரணமாக நாடு முழுவதும் 3 ம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு முதலில் அமல்படுத்தப்பட்டதில் இருந்து சினிமா சார்ந்த பணிகளும் நிறுத்துவைக்கப்பட்டது.
இதனால் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை போன்ற சினிமாவை சார்ந்து இருக்கும் மக்களின் அன்றாட வாழ்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவு காரணமாக அரசாங்கம் மற்றும் சினிமா பிரபலங்கள் அவர்களுக்கு நிவாரணம் வழங்கி வருகிறார்கள். இருந்தாலும், அரசாங்கமும், பிரபலங்களும் அளிக்கும் நிவாரணங்களை வைத்து தங்களால் சமாளிக்க முடியவில்லை என்று வேதனை தெரிவித்து வருகின்றனர்.
இதனை கருத்தில் கொண்டு கேரளா மாநிலத்தில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதுவும் 5 பேருக்கு மேல் இருக்க கூடாது என்றும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அந்த வகையில் சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி தருவது குறித்து முதல்வருடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.