ஆன்லைன் ரம்மி தடை சட்டத்தை அதிமுக தான் கொண்டு வந்தது.! முன்னாள் அமைச்சர் பேட்டி.!
ஆன்லைன் ரம்மி தடை சட்டத்தை முதலில் கொண்டு வந்தது அதிமுக தான். – முன்னாள் அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் .
தமிழக அரசு சட்டப்பேரவையில் இரண்டாவது முறையாக தாக்கல் செய்த ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கி விட்டார். இது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் செய்தியாளர்களிடம் தனது கருத்தை பதிவு செய்தார்.
சட்ட மசோதா :
அவர் கூறுகையில், ஆளுநரின் முடிவுகளை விமர்சிப்பது தவறு. ஒரு சட்டத்தை திருப்பி அனுப்பும் உரிமை அவருக்கு உண்டு. அதே சட்டம் மீண்டும் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டால் அதற்கு ஆளுநர் கைய்யெழுத்திட்டாக வேண்டும். என்று குறிப்பிட்டார்.
ஆளுநரின் உரிமை :
இருந்தாலும், ஆன்லைன் தடை சட்ட மசோதாவுக்கு கொஞ்சம் விரைவில் ஒப்புதல் வழங்கி இருக்கலாம் என கூறினார். எந்த சட்டம் மக்களுக்கு உகந்ததோ அதனை உடனடியாக ஒப்புதல் வழங்கி அனுப்பலாம். மக்களுக்கு எதிரான சட்டங்களை நிராகரிக்கலாம் என குறிப்பிட்டு பேசினார்.
முதலில் அதிமுக தான் ;
மேலும், ஆன்லைன் ரம்மி தடை சட்டத்தை முதன் முதலில் கொண்டு வந்தது அதிமுக தான் எனவும் அவர் மாஃ பா.பாண்டியராஜன் குறிப்பிட்டார். மேலும், எதிர்க்கட்சி துணை தலைவராக ஆர்.பி.உதயகுமாரை சபாநாயகர் அங்கீகரிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் ஆளுநரின் செயல்பாடு அதர்ம போக்கு என விமர்சனம் செய்து பேசினார் அதிமுக முன்னாள் அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன்.