அ.தி.மு.க சார்பில் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தினகரனின் கட்சிக்கொடிக்கு எதிராக ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ டிடிவி தினகரன் நேற்று(மார்ச்.15) தனது கட்சியின் பெயர் மற்றும் கொடியினை மதுரை மேலூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் அறிவித்தார். அதன்படி கட்சியின் பெயர் “அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்” என அறிவிக்கப்பட்டது. கருப்பு, வெள்ளை, சிவப்பு வண்ணங்களும், மத்தியில் ஜெயலலிதாவின் உருவப்படமும் பொருந்திய கட்சியின் கொடியும் அறிமுகப்படுத்தப்பட்டது.
இதனையடுத்து தினகரனின் கட்சிக்கொடிக்கு எதிராக அ.தி.மு.க சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் அளித்த மனுவில், “அ.தி.மு.கவின் கொடியின் அமைப்பைப் போன்றே தினகரனின் கொடியின் அமைப்பும் உள்ளது. எனவே தினகரன் கட்சியின் கொடியை உபயோகிக்க தடை விதிக்க வேண்டும்” என கூறப்பட்டுள்ளது. விரைவில் இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் நேற்றைய தினம் நிறைவடைந்தது. இன்றைய தினம் இரண்டாம்…
சிங்கப்பூர் :உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ( FIDE) சிங்கப்பூரில் இன்று முதல் தொடங்குகிறது. சிங்கப்பூரின் ரிசார்ட்ஸ் வேர்ல்ட் சென்டோசாவில்…
மகாராஷ்டிரா : நடந்து முடிந்த மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெற்று…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கி டிசம்பர் 20ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.…
புது டெல்லி : மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி…
சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தற்போது வலுவடைந்துள்ளது.மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்…