அதிமுக டிடிவி.தினகரன் துவக்கியுள்ள புதிய அமைப்பின் கொடிக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளது. ஜெயலலிதா படத்துடன் கூடிய டிடிவி அமைப்பின் கொடி, அதிமுக கொடியை போல் உள்ளதால் தடை விதிக்க வேண்டும் என அதிமுக சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நேற்று மதுரை மேலூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஆர்.கே.நகர் சுயேட்சை எம்எல்ஏ (MLA)-வான டிடிவி தினகரன், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற அமைப்பையும், அதற்கான கொடியையும் அறிமுகம் செய்து வைத்தார். பொதுக்கூட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட கொடியில் கறுப்பு, வெள்ளை, சிவப்பு உள்ளிட்ட நிறங்கள் வரிசையாகவும் அதன் நடுவில் ஜெயலலிதா படமும் இடம்பெற்றுள்ளது. அதிமுக கொடியில் அண்ணாவின் படம் இருப்பது போல, டிடிவி தினகரனின் கொடியில் ஜெயலலிதாவின் படம் இடம்பெற்றுள்ளது. பின்னர் மேடையில் பேசிய அவர் இயக்கம், கொடி, சின்னம் உள்ளிட்டவை இல்லாமல் நாம் இவ்வளவு நாள் தவித்து வந்ததோம். இனி நிலைமை அப்படி இல்லை.தனி இயக்கமாகச் செயல்படப்போகிறோம். விரைவில் அதிமுகவை கைப்பற்றி தமிழகத்தில் ஆட்சியமைப்போம் என்றார்.
இந்நிலையில் நேற்று அறிமுகம் செய்து வைக்கப்பட்ட டிடிவி தினகரன் அமைப்பின் அம்மா மக்கள் முன்னேற்ற கழக கொடிக்கு எதிராக, அதிமுக சார்பில் தடை கேட்டு இன்று வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர்களான ஓ.பி.எஸ். மற்றும் முதல்வர் பழனிசாமி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. இதில் தினகரன் அமைப்பின் கொடி அதிமுக கொடியை போலேவ கறுப்பு, சிவப்பு, வெள்ளை நிறங்கள் அடங்கி இருப்பதாகவும், கொடியின் நிறங்கள் இரண்டிலுமே ஒரே மாதிரி இருப்பதால் அது தொண்டர்களை குழப்பமடையச் செய்யும் என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது. அமமுக அமைப்பின் கொடியை நாளிதழ் விளம்பரங்களில் பயன்படுத்த தடை விதிக்கவும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…