அதிமுகவினர் குலுக்கல் முறைக்கு எதிர்ப்பு .!

- இன்று தமிழகத்தில் 27 மாவட்டங்களில் மறைமுக தேர்தல் நடைபெற்று வருகிறது.
- மங்களூர் ஒன்றியத்தில் குலுக்கல் முறைக்கு அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்ததால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
தமிழகத்தில் 27 மாவட்டங்களுக்கான மாவட்ட ஊராட்சி தலைவர், துணை தலைவர், ஊராட்சி ஒன்றிய குழு தலைவர், ஒன்றிய குழு துணை தலைவர், ஊராட்சி துணை தலைவர் என 5 பதவிகளுக்கு மறைமுக தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள மங்களூர் ஒன்றியத்தில் இன்று மறைமுகத் தேர்தல் நடைபெற்றது .இந்த தேர்தலில் திமுக வேட்பாளரும் , அதிமுக வேட்பாளரும் இருவரும் சமமான வாக்குகள் பெற்று இருந்தனர்.
இதை தொடர்ந்து குலுக்கல் முறையில் தேர்வு செய்ய அதிகாரிகள் முடிவு செய்தனர்.இந்த குலுக்கல் முறைக்கு அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.இதனால் மங்களூர் ஒன்றியத்திற்கு தேதி குறிப்பிடாமல் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
லேட்டஸ்ட் செய்திகள்
“ஆமாம்., நாங்கள் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்தோம்!” பாகிஸ்தான் அமைச்சர் பரபரப்பு பேட்டி!
April 25, 2025
பதிப்புரிமை வழக்கில் சிக்கிய ஏ.ஆர்.ரஹ்மான் – ரூ. 2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு.!
April 25, 2025