சசிகலா காரில் அதிமுக கொடி – அமைச்சர்கள் டிஜிபியிடம் புகார்

Default Image

சசிகலா காரில் அதிமுக கொடி பயன்படுத்தியதால் அதிமுக அமைச்சர்கள் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

சசிகலா காரில் அதிமுக கொடி : 

பெங்களூர் விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கொரோனாவிற்கான சிகிச்சையை சசிகலா பெற்று வந்த நிலையில் கடந்த 31-ஆம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.மருத்துவமனையில் இருந்து புறப்படும் போது சசிகலாவுக்கு சொந்தமான காரின் முகப்பில் அதிமுக கொடி பொருத்தப்பட்டு இருந்தது.இது அரசியலில் களத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது.

தினகரன் கருத்து : 

இதுகுறித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறுகையில், அதிமுகவின் பொதுச்செயலாளர் சசிகலா தான். நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால்,அவரது காரில் அதிமுக கொடி பொருத்தப்பட்டது.

அதிமுகவை மீட்டெடுக்கவே அமமுக தொடங்கப்பட்டது. இதுபோன்று ஜனநாயக முறையில் அதிமுகவை மீட்டெடுக்க சசிகலா சட்டப்போராட்டத்தை தொடர்வார்கள். மற்றோரு கட்சியை ஆரம்பித்ததே ஜனநாயக முறையில் தேர்தலில் நின்று வெற்றி பெற்று, அதிமுகவை மீட்டெடுப்பதற்காக தான் அமமுகவை ஆரம்பித்துள்ளோம் என்று கூறினார். சசிகலா டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் காரில் அதிமுக கொடி இடம்பெற்றது  குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சசிகலா காரில் அதிமுக கொடி பயன்படுத்தியதால் அதிமுக அமைச்சர்கள் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.தமிழக டிஜிபியிடம் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், ஜெயக்குமார், அதிமுக மூத்த நிர்வாகிகள் புகார் அளித்துள்ளனர்.அதிமுக கொடியை பயன்படுத்திய சசிகலா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.வருகின்ற 8-ஆம் தேதி தமிழகத்திற்கு வரும்போது காரில் அதிமுக கொடியை பயன்படுத்தாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க கோரி புகார் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
US President Donald Trump - Elon musk
Sexual harassment
telangana tunnel collapse
Earthquake - BayofBengal
Pakistan vs Bangladesh 2025