அண்ணாச்சி கூட்டணி என்னாச்சி.? பாமகவை விட்டு பிடித்த அதிமுக.!

PMK Leader Anbumani Ramdoss - ADMK Chief President Edappadi Palanisamy

ADMK-PMK :  வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகத்தில் மக்களவை தேர்தல் நடைபெறும் என தேதி அறிவிக்கபட்ட பின்னரும் கொங்கு மண்டலத்தில் பிரதான கட்சியாக இருக்கும் பாமக இன்னும் தங்கள் தேர்தல் கூட்டணி நிலைப்பாட்டை இறுதி செய்யாமல் இருந்து வருகிறது. திமுக அதன் கூட்டணி கட்சிகளுடனான தொகுதி உடன்பாடை இறுதி செய்துவிட்டது. இன்னும் சில தினங்களில் திமுகவுக்கு என்னென்ன தொகுதிகள், கூட்டணி கட்சிகளுக்கு என்னென்ன தொகுதிகள் , யார் வேட்பாளர்கள் என்ற விவரங்கள் வெளியாகிவிடும்.

Read More – பொன்முடிக்கு அமைச்சர் பதவிப் பிரமாணம் செய்து வைக்க முடியாது: ஆளுநர் ரவி மறுப்பு

ஆனால், தமிழகத்தில் அடுத்த பிரதான கூட்டணிகளாக பார்க்கப்படும் அதிமுக, பாஜக கட்சிகள் தங்கள் கூட்டணி கட்சிகளையே இன்னும் இறுதி செய்யாமல் இருந்து வருகிறது. குறிப்பாக இரு கட்சிகளுமே எதிர்நோக்கி காத்திருப்பது பாமக கட்சியின் கூட்டணி முடிவுக்காக தான்.

பாமகவில் வரும் சட்டமன்ற தேர்தலையும் கருத்தில் கொண்டு அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறுவதாகவும், மத்தியில் மீண்டும் பாஜக வெல்லும் சூழல் இருப்பதாகவும் அதனால் பாஜகஉடன் கூட்டணி வைத்து மத்திய அமைச்சர் பொறுப்பு வாங்கலாம் என பாஜக கூட்டணிக்கு அடித்தளம் அமைத்து வருகிறார் அன்புமணி ராமதாஸ் என அரசியல் வட்டாரத்தில் பேச்சுக்கள் எழுந்துள்ளன .

Read More – தேர்தல் பத்திரங்கள்! லாட்டரி மார்ட்டின் நிறுவனத்திடம் ரூ.509 கோடி பெற்ற திமுக: CSKவிடம் ரூ. 4 கோடி பெற்ற அதிமுக

இறுதியில், டாக்டர் ராமதாஸ் கூறியதன்படி, பாமக எம்எல்ஏ அருள், நேற்று சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து விட்டு வந்துள்ளார். இதில் கூட்டணி உறுதி செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாமக சார்பில், பாஜக கூட்டணியில் 10 மக்களவை தொகுதி , 1 மாநிலங்களவை தொகுதி, 1 மத்திய அமைச்சர் பதவி என கேட்கட்பட்டதாகவும், அதிமுக கூட்டணியில் 7 மக்களவை தொகுதி, 1 மாநிலங்களவை தொகுதி கேட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. இதில், பாமகவுக்கு 10 மக்களவை தொகுதி, மாநிலங்களவை, மத்திய அமைச்சர் பதவி ஆகிய கோரிக்கைளை ஏற்க பாஜக தங்கியதாக தெரிகிறது. அதே நேரத்தில் அதிமுகவும் தங்கள் கூட்டணியை இறுதி செய்யாமல் காத்திருந்தது.

Read More – பாஜகவை வீழ்த்துவதிலேயே ராகுல் காந்தியின் வெற்றி உள்ளது: மும்பையில் மு.க.ஸ்டாலின் பேச்சு

இறுதியில், அதிமுக – பாமக கூட்டணி கிட்டத்தட்ட உறுதி என்றும், இன்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உடன் , அன்புமணி ராமதாஸ், ஜி.கே.மணி உள்ளிட்ட பாமக நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்து அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்