சேலம்: கொண்டலாம்பட்டியை சேர்ந்த அதிமுக பிரமுகர் சண்முகம் என்பவர் நேற்று இரவு மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
சேலம் மாவட்டம் கொண்டாலம்பட்டி பகுதி மாரியம்மன் கோயில் 4வது தெருவை சேர்ந்தவர் சண்முகம் (வயது 54). அதிமுக பிரமுகரான இவர் அப்பகுதியில் ரியல் எஸ்டேட் தொழிலும் நடத்தி வந்துள்ளார். நேற்று இரவு அம்பாள் ஏரி ரோடு பகுதியில் உள்ள தனது அலுவலகத்தில் இருந்து தனது இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டு வந்துள்ளார்.
அப்போது சஞ்சீவிராயன்பேட்டை மாரியம்மன் கோயில் தெரு அருகில் வந்து கொண்டு இருக்கையில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் மர்ம நபர்கள் சிலர் சண்முகத்தை வழிமறித்து அரிவாள் உள்ளிட்ட கூறிய ஆயுதங்களால் அவரை கொடூரமாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயமுற்ற சண்முகம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
உயிரிழந்த சண்முகம் ,கடந்த 2011 முதல் 2016 வரையில் கொண்டாலம்பட்டி மண்டல தலைவராக பொறுப்பில் இருந்துள்ளார் என்பது குறிப்பிட தக்கது. தகவல் அறிந்ததும் காவல்துறையினர் , சண்முகம் குடும்பத்தினர், அதிமுகவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என கோரிக்கை முன்வைத்து சண்முகம் ஆதரவாளர்கள் உடலை அங்கிருந்து அகற்ற மறுத்துள்ளனர் என கூறப்படுகிறது.
பின்னர் , சண்முகம் ஆதரவாளர்கள் உடன் பேச்சுவார்த்தை நடத்தி சண்முகத்தின் உடலை அங்கிருந்து அகற்றி சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். சேலம் மாநகர காவல்துறையினர் தற்போது கொலையாளிகளை பிடிக்க விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…
குஜராத்: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள்…
சென்னை: வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான, 'விடுதலை' முதல் பாகம்…