நெல்லையில் பயங்கரம்.! அதிமுக பிரமுகர் சரமாரியாக வெட்டிக்கொலை.! மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு.!
திருநெல்வேலி பேட்டை பகுதியில் அதிமுக பிரமுகர் பிச்சை ராஜு மர்மநபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
திருநெல்வேலி பேட்டை பகுதி மயிலாபுரத்தை சேர்ந்தவர் 52 வயதான பிச்சை ராஜு. அதிமுக பிரமுகரான இவர் முன்னாள் பேட்டை பஞ்சாயத்து துணை தலைவராகவும் பொறுப்பில் இருந்துள்ள இவர் பேட்டை எம்ஜிஆர் நகரில் மதுபான பார் ஒன்றை நடத்தி வருகிறார்.
இவர் நேற்று இரவு மதுபான பார் நேரம் முடிந்து இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு செல்லும் வழியில் வீரபாகு நகர் அருகே சென்று கொண்டிருக்கையில், பிச்சை ராஜூவை மர்ம நபர்கள் சிலர் வழிமறித்து கூறிய ஆயுதங்களால் சரமாரியாக வெட்டிவிட்டு, அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.
படுகாயங்களுடன் உயிருக்கு போரடிய பிச்சை ராஜூவை பார்த்தும், அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் காவல்துறைக்கு போன் செய்து, பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக பிச்சை ராஜு உயிரிழந்துவிட்டார்.
இந்நிலையில், பேட்டை பகுதி காவல்துறையினர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் . சம்பவ இடத்திற்கு நெல்லை காவல்துறை துணை ஆணையர் அனிதா நேரில் பார்வையிட்டார். தற்போது இந்த படுகொலை சம்பவத்தில் ஈடுப்பட்ட மர்மகும்பலை தேடும் பணியில் தனிப்படை போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.