ஏழை ரோட்டில்.. மாணவர்கள் சுடுகாட்டில்.. மீனவர்கள் ஜெயிலில்.! இதுதான் விடியல் அரசா.? திமுகவை விமர்சிக்கும் பிரபல நடிகை.!
போக்ஸோ பிரிவின் கீழ், மாதம் மாதம் வழக்குகள் அதிகமாகி கொண்டே போகிறது. மாணவர்கள் சுடுகாட்டில் இருக்காங்க. மீனவர்கள் வெளிநாட்டு ஜெயிலில் இருக்காங்க. இதுதான் விடியல் அரசா.? – என திமுக அரசின் மீது அதிமுக பேச்சாளர் நடிகை விந்தியா சரமாரி குற்றசாட்டுகளை முன்வைத்தார்.
அதிமுக சார்பில் நேற்று கோயம்புத்தூரில், நடைபெற்ற கூட்டத்தில் தமிழ் திரைப்பட நடிகையும், அதிமுக பேச்சாளருமான விந்தியா பேசியிருந்தார். அப்போது , திமுக அரசின் மீது போக்ஸோ வழக்குகள், மீனவர்கள் கைது, மாணவர்கள் மரணம் என சரமாரியாக குற்றசாட்டுகளை முன்வைத்தார்.
அதில் பேசுகையில், ‘ திமுக ஆட்சி விடியல் ஆட்சி என்கிறார்கள். இங்கு விடிஞ்சாலும் இருட்டா தான் இருக்கு. போக்ஸோ பிரிவின் கீழ், மாதம் மாதம் வழக்குகள் அதிகமாகி கொண்டே போகிறது. ஏழைகள் ரோட்டுல இறுக்கங்க. மாணவர்கள் சுடுகாட்டில் இருக்காங்க. மீனவர்கள் வெளிநாட்டு ஜெயிலில் இருக்காங்க. இதுதான் விடியல் அரசா.?
நாளுக்கு நாள் தினம் 4 குடும்பம் கந்துவட்டியால் பாதிக்கப்டுகிறதை பார்க்கிறோம். சின்ன சின்ன வியாபாரம் முதல், சினிமா வியாபாரம் வரையில் யாருமே இங்கு தொழில் நடத்த முடியவில்லை. இது விடியல் அரசு இல்லை வெறும் விளம்பர அரசு தான். ‘ என கடுமையாக விமர்சித்துள்ளளார் அதிமுக பேச்சாளர் நடிகை விந்தியா.