இன்று அதிமுக நாடாளுமன்ற குழு தலைவர் தம்பிதுரை , பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்தார்.
கடந்த சில வாரங்களாகவே தமிழக அரசியலில் பாஜக மற்றும் அதிமுக இடையே உரசல்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. இரண்டு கட்சி தலைமையை பொறுத்தவரை கூட்டணி தொடரும் என கூறி வந்தாலும், சில கருத்து மோதல்கள் ஓய்ந்தபாடில்லை என்பது வெளிப்படையாகவே தெரிகிறது.
பிரதமர் மோடி – தம்பிதுரை சந்திப்பு :
பாஜக நிர்வாகிகள் பலர் அதிமுகவில் தொடர்ந்து இணைந்த வண்ணம் இருக்கின்றனர். இந்த சமயத்தில் பிரதமர் மோடியை மாநிலங்களவை உறுப்பினரும், அதிமுக நாடாளுமன்ற குழு தலைவருமான தம்பிதுரை நேரில் சந்தித்துள்ளார்.
இரு மாநில தேர்தல் :
இந்த திடீர் சந்திப்பு பற்றி அவர் தரப்பில் இருந்து, திரிபுரா , நாகலாந்து சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவின் வெற்றிக்கு அதிமுக சார்பில் நேரில் வாழ்த்து தெரிவிப்பதற்கான சந்திப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாஜக – அதிமுக கூட்டணி :
மேலும், இருகட்சிகளிலும் சில நிர்வாகிகளுக்கு இடையே கருத்து மோதல் இருந்தாலும், அதிமுக – பாஜக கூட்டணி தொடரும் என்பதையே இந்த சந்திப்பு உணர்த்துவதாக தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
ஹைதராபாத் : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த நடிகை கஸ்தூரி தற்போது ஹைதராபாத்தில்…
பீகார் : ஹாக்கியில் மகளிருக்கான 8-வது ஆசிய கோப்பைத் தொடரானது தற்போது பீகாரில் உள்ள ராஜ்கிரில் நடைபெற்று வருகிறது. இந்த…
மாஸ்கோ : கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி முதல், நோட்டோ அமைப்பு நாடுகளுடன் உக்ரைன் இணையக் கூடாது…
சென்னை : வரும் நவம்பர் 20-ஆம் தேதி நயன்தார-விக்னேஷ் சிவன் இருவரின் திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது.…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…