அதிமுக அலுவலகத்தில் காணாமல் போனதாக கூறப்பட்ட பொருட்கள் அங்கேயே இருக்கிறது.! சிபிசிஐடி தகவல்.!
காணாமல் போனதாக கூறப்பட்ட வெள்ளி வேல், அதிமுக அலுவலகத்தில் தான் இருக்கிறது என சிபிசிஐடி தகவல் அளித்துள்ளது.
கடந்த ஜூலை 11ஆம் தேதி இபிஎஸ் தலைமையில் அதிமுக பொதுக்குழு நடைபெற்றது. அந்த பொதுக்குழு நடைபெற்ற சமயத்தில் அதிமுக அலுவலகத்தில் ஓர் கலவரமே நடைபெற்றது என்று கூறலாம். அங்குள்ள பொருட்கள் சேதமடைந்தன. ஆவணங்கள் சிதறி கிடந்தன.
இதுகுறித்து, ஓபிஎஸ் ஆதரவாளரும் , முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் போலீசில் புகார் அளித்து இருந்தார். அதிமுக அலுவலகத்தில் இருந்த முக்கிய பொருட்கள் காணாமல் போய்விட்டதாகவும், ஆவணங்கள் திருடப்பட்டதாகவும் புகார் அளித்து இருந்தார்.
இதுகுறித்து, சிபிசிஐடி போலீசார் 20 பெரும், பொதுப்பணித்துறை அதிகாரிகளும் அதிமுக அலுவலகத்தில் இன்று காலை 8 மணிமுதல் சோதனையில் ஈடுப்பட்டு வந்தனர்.
அதில், முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள காணாமல் போனதாக கூறப்பட்ட வெள்ளி வேல், அதிமுக அலுவலகத்தில் தான் இருக்கிறது என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சோதனை நடைபெற்று வருகிறது.
பொதுப்பணித்துறை அதிகாரிகள் , அதிமுக அலுவலகம் எந்தளவுக்கு சேதமடைந்துள்ளது என்பதை ஆய்வு செய்தும், சிபிசிஐடி அதிகாரிகள் ஆய்வு செய்த அறிக்கையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளன.