அதிமுக அலுவலக கலவர வழக்கில் அதிமுக அலுவலகத்தில் காணாமல் போனதாக கூறப்பட்ட ஆவணங்கள் அனைத்தும் ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தியிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக சிபிசிஐடி தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஜூலை 11ஆம் தேதி அதிமுக அலுவலக வளாகத்தில் இரு தரப்பினர் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் அதிமுக அலுவலகம் மற்றும் பொது சொத்துக்களும் சேதமடைந்தன.
இந்த விவகாரம் தொடர்பாக, இபிஎஸ் தரப்பில் முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகம், ஓபிஎஸ் ஆதரவாளர், ராயப்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் கொடுத்த புகார் உட்பட 4 புகார்கள் அளிக்கப்பட்டன.
பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடி வசம் சென்றது. இதனை விசாரித்து வந்த சிபிசிஐடி அதிகாரிகள், அதிமுக அலுவலகத்தில் காணாமல் போனதாக ஏற்கனவே கூறப்பட்ட வேல் அலுவலகத்திலேயே இருந்தது கண்டறியப்பட்டது.
இதனை தொடர்ந்து ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்பிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். ஏற்கனவே, ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ண மூர்த்தி என்பவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
தற்போது அவரிடம் இருந்து, காணாமல் போனதாக கூறப்பட்ட மொத்தம் 113 ஆவணங்களும் மீட்கப்பட்டுள்ளதாக சிபிசிஐடி தரப்பினர் தகவல் தெரிவித்துள்ளனர். மீட்கப்பட்ட ஆவணங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளன.
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…