தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இன்னும் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்கவில்லை. அதர்குள் திமுக, அதிமுக உள்ளிட்ட பிரதான கட்சிகள், தங்கள், கட்சி உறுப்பினர்களை பேரூராட்சி தலைவர், நகராட்சி தலைவர், மேயர் ஆகிய பொறுப்புகளுக்கு போட்டியிட விருப்ப மனுக்களை வாங்கியிருந்தனர்.
இதில் அதிமுக, தற்போது அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, பேரூராட்சி தலைவர், நகராட்சி தலைவர், மேயர் ஆகிய பதவிகளுக்கு தமிழக அரசு மறைமுக தேர்தல் நடத்த சட்டம் இயற்றியுள்ளதால், விருப்பமனு கட்டணம் செலுத்தியவர்கள் தாங்கள் அளித்த கட்டணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளலாம். 25.11.2019 தேதியில் இருந்து 29.11.2019 தேதிக்குள் விருப்ப மனு கட்டணம் செலுத்திய அசல் ரசீது கொண்டு வந்து பணத்தை திருப்பி வாங்கிக்கொள்ளலாம் என அறிக்கையில் அதிமுக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
மேலும், மறைமுக தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் 22.11.2019 தேதி காலை 10 மணிமுதல் மாலை 5 மணிக்குள் உரிய அறிவிக்கப்பட்ட கழக நிர்வாகிகளிடம் விருப்ப மனு பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : 2024 சென்னை சர்வதேச திரைப்பட விழா டிசம்பர் 12, முதல் டிசம்பர் 19, வரை சென்னையில் நடைபெற்றது. தமிழக…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
டெல்லி : நாகாலாந்து பாஜக பெண் எம்பி ஒருவர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தன் அருகே…
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…