முதியோர் உதவித்தொகை விவகாரம்.! எம்எல்ஏக்கள் கூட்டத்தில் வெளியேற முற்பட்ட அதிமுக எம்எல்ஏக்கள்.!

Default Image

கடந்த அதிமுக ஆட்சியில் 1000 ரூபாய் கொடுத்து வந்தோம். இவர்கள் 1500 உயர்த்தி தருவதாக கூறினார்கள். ஆனால் இன்னும் அதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை. – என அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். 

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் எனும் திட்டத்தின் கீழ், தமிழகத்தில் உள்ள தொகுதிகளில் அந்தந்த தொகுதி எம்.எல்.ஏக்கள் வைக்கும் கோரிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

அதன்படி, மதுரையில் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன்,  மூர்த்தி, அதிமுக எம்.எல்.ஏக்களான செல்லூர் ராஜு மற்றும் ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அப்போது எம்.எல்.ஏக்களின் கோரிக்கைகள் பற்றி ஆலோசிக்கப்பட்டது. அதில், முதியோர் உதவித்தொகை 1500 தருவதாக கூறினீர்கள். இன்னும் அதுபற்றிய நடவடிக்கை இல்லை என செல்லூரி ராஜு தெரிவித்தார். அந்த சமயம் , பழனிவேல் தியாகராஜன் வரலாற்றில் இதுபோன்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இல்லை. என பேசினார்.

அப்போது, அதிமுக எம்.ஏக்கள் வெளியே செல்ல முற்பட்டனர். பின்னர் அமைச்சர் மூர்த்தி அவர்களை சமாதானப்படுத்தி அமரவைத்தார். பின்னர், ஆலோசனை கூட்டம் வெளியே வந்த அதிமுக எம்.எல்.ஏ செல்லூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

செல்லூர் ராஜு கூறுகையில், ‘ நாங்கள் மக்கள் பிரச்னை பற்றி பேசுகிறோம். முதியோர் உதவி தொகை கடந்த அதிமுக ஆட்சியில் 1000 ரூபாய் கொடுத்து வந்தோம். இவர்கள் 1500 உயர்த்தி தருவதாக கூறினார்கள். ஆனால் இன்னும் அதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை. ‘ என குற்றம் சாட்டினார்.

மேலும், கூறுகையில், ‘ எங்கள் எதிர்க்கட்சி தலைவர் சட்டையெல்லாம் கிழித்து கொண்டு வெளியே வர மாட்டார். ‘ எனவும் விமர்சித்து பேசினார் அதிமுக எம்.எல்.ஏ செல்லூர் ராஜு.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்