அறந்தாங்கி அதிமுக எம்எல்ஏ ரத்தின சபாபதியின் தம்பியான பரணி கார்த்திகேயன் திமுக வில் இணைந்துள்ளார்.
அமமுகவில் இருந்து விலகி சமீபத்தில் தனது தொண்டர்களுடன் திமுகவில் இணைந்தவர் தங்கத்தமிழ்செல்வன்.அவருக்கு திமுகவில் கொள்கை பரப்பு செயலாளர் பதவி வழங்கப்பட்டது.இவர் அமமுகவில் இருந்தபோது அவருக்கு கொள்கை பரப்பு செயலாளர் பதவி வழங்கப்பட்ட நிலையில் திமுகவிலும் கொள்கை பரப்பு செயலாளர் பதவி வழங்கப்பட்டது.
தங்க தமிழ்ச்செல்வனை போல அமமுகவில் இருந்து விலகி வந்தவர் வி.பி.கலைராஜன்.இவருக்கு திமுகவில் இலக்கிய அணி இணை செயலாளராக நியமனம் செய்யப்பட்டார்.
ஏற்கனவே அமமுகவில் இருந்து விலகி திமுக வந்த செந்தில் பாலாஜி அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.
அமமுகவில் இருந்து திமுக சென்றவர்களுக்கு முக்கிய பதவிகள் வழங்கப்பட்டு வரும் நிலையில் இன்று புதுக்கோட்டை அமமுக செயலராக இருந்த பரணி கார்த்திகேயன், சென்னையில் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.அறந்தாங்கி அதிமுக எம்எல்ஏ ரத்தின சபாபதியின் தம்பி பரணி கார்த்திகேயன் என்பது குறிப்பிடத்தக்கது.
நியூ யார்க் : அமெரிக்காவில் அண்மையில் தேர்தல் முடிந்து குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் அதிபராக வெற்றி பெற்றார்.…
சென்னை : வரும் ஜனவரி 10-ஆம் தேதி சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது எனவும், வரும் நாட்களில் வானிலை எப்படி…
சிட்னி : ஆஸ்ரேலியா அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி ஜனவரி 3 சிட்னி மைதானத்தில் தொடங்கியது. இதில் முதலில்…
ஸ்ரீஹரிகோட்டா : கடந்த ஆண்டு டிசம்பர் 30-ஆம் தேதி ஆந்திர பிரதேசம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி…
சென்னை : அண்ணா பல்கலைகழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக பல்வேறு கட்சியினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று…
சிட்னி : இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் சமீபத்திய டெஸ்ட் பார்ம் மோசமாக இருப்பதால் அவர் மீது கடுமையான விமர்சனங்கள்…