இபிஎஸ் தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.! சட்டப்பேரவை குறித்து முக்கிய ஆலோசனை.!
சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் எம்.எல்.ஏக்கள், மாவட்ட செயலாளரக்ள் கலந்துகொண்டுள்ள ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.
தமிழக சட்டப்பேரவை இம்மாதம் 17ஆம் தேதி தொடங்க உள்ளது. இதனை சட்டசபை சபாநாயகர் அப்பாவு அண்மையில் தெரிவித்தார். கடந்த முறை சட்டசபை கூட்டத்தொடரின் போது, எதிர்க்கட்சி தலைவராக இபிஎஸ் துணை தலைவராக ஓபிஎஸ் இருந்தனர். அருகருகே இருக்கை அமைக்கப்பட்டது .
தற்போது இரு தரப்பும் தனி தனியாக பிரிந்து விட்டதால், இபிஎஸ் தரப்பு, நீதிமன்ற தீர்ப்பு எங்கள் பக்கம் தான் உள்ளது. எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமியும், துணை தலைவராக ஆர்.பி.உதயகுமாரும் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், ஆகவே, ஓபிஎஸ் தரப்புக்கு எங்கள் அருகே இருக்கை அமைக்க வேண்டாம் எனவும் கடிதம் எழுதி சபாநாயகரிடம் கொடுத்துள்ளனர்.
அதே போல ஓபிஎஸ் தரப்பு, உச்சநீதிமன்றத்தில் அதிமுக பொதுக்குழு வழக்கு நிலுவையில் உள்ளதால் இபிஎஸ் கோரிக்கையை ஏற்க வேண்டாம் எனவும், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தான் எனவும் சபாநாயகரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தற்போது எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர் மாளிகையில், அதிமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கலந்துகொண்டுள்ள ஆலோசனை கூட்டம் தொடங்கியுள்ளது. இதில் சட்டப்பேரவை கூட்டத்திற்காக செய்ய வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கபடும் என தகவல் வெளியாகியுள்ளது.