#Breaking : என்எல்சி விவகாரம்.! அதிமுக எம்எல்ஏ கைது.!
என்எல்சி சுரங்க விரிவாக்கத்தின் போது நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய போது அதிமுக எம்எல்ஏ அருண்மொழி தேவன் கைது செய்யப்பட்டார்.
கடலூர், என்எல்சி நிலக்கரி சுரங்க விரிவாக்க பணிகளுக்கு வளையமான்தேவி கிராமத்தில் நிலம் கையகப்படுத்தும் முயற்சியில் என்எல்சி நிர்வாகம் ஈடுப்பட்டது. இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
என்எல்சி விரிவாக்கம் :
நிலத்திற்க்கான உரிய இழப்பீட்டு தொகை கிடைக்கவில்லை எனவும், என்எல்சி கூறும் நிரந்தர பணி பற்றியும் உறுதியான தகவல் வெளியாகவில்லை என கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
பாமக போராட்டம் :
மேலும், பாமக , அதிமுக உள்ளிட்ட கட்சியினரும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். நேற்று என்எல்சி சுரங்க விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாமகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிமுக எம்எல்ஏ கைது :
என்எல்சி நிர்வாகமானது, வளையமான்தேவி கிராமத்தில் 2006ஆம் ஆண்டு கைக்கப்படுத்திய நிலங்களை சமன் படுத்தும் முயற்சியில் இறங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில், புவனகிரி அதிமுக எம்எல்ஏ அருண் மொழி தேவன் கலந்து கொண்டார். இந்த போராட்டத்தின் போது, வளையமான்தேவி கிராமத்திற்குள் அதிமுக எம்எல்ஏ நுழைய முயன்றார். அப்போதுகாவல்துறையினர் தடுத்து, அவரை கைது செய்தனர்.