தவறு செய்தால் பாத்ரூமில் வழுக்கி விழுந்து கை உடையத்தான் செய்யும்! அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பளீர்!
வேலூரில் பிரச்சாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. தலைவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி பேசி மக்களிடம் வாக்கு சேகரித்து வருகின்றனர். திமுக தலைவர் முக.ஸ்டாலின், வேலூர் மாவட்டம் ஆம்பூரில் உள்ள மண்டபத்தில் உரிய அனுமதியின்றி கூட்டம் நடத்தியதால், கூட்டம் நடைபெற்ற மண்டபத்திற்கு சீல் வைக்கப்பட்டது. இது குறித்தும் இன்னும் சில நிகவுகளை குறித்தும் தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துள்ளார்.
அதில் அவர் கூறுகையில், ‘ தேர்தல் நடக்கும் வேளையில் 10 பேர் கொண்ட கூட்டத்தை கூட்ட வேண்டும் என்றாலே அனுமதி வாங்கவேண்டும். அப்படி இருக்க, ஒரு கட்சியின் தலைவரே கலந்துகொள்ளும் கூட்டம் அனுமதி பெறாமல் நடைபெற்றால் அந்த மண்டபத்திற்கு சீல் தான் வைப்பார்கள். திமுக சொன்னாலும் அரசும், மக்களும் அப்படியே கேட்டு கொள்ளவேண்டுமா?! யாராக இருந்தாலும் சட்டம் தன் கடமையை செய்யும்.
அதிமுகவை சேர்ந்தவர்கள் தவறு செய்தாலும் பாத்ரூமில் வழுக்கி விழுந்து கை உடையும், அதே போல திமுகவினர் தவறு செய்தாலும் பாத்ரூமில் வழுக்கி விழுந்து கை உடையதான் செய்யும். எடப்படியார் ஆட்சி அப்படித்தான் இருக்கும்.’ என தெரிவித்தார்.
சமீபகாலமாக தமிழக காவல்துறையில் விசாரணையில், பலரும் பத்ரூமில் வழுக்கி விழுந்து வலது கை உடைந்துவிடுகிறது. இது தொடர்பாக பலரும் கேள்வி கேட்டு வருகின்றனர்.