நீதிமன்ற தீர்ப்பை அடுத்து இபிஎஸ்-ஐ அதிமுக பொதுச்செயலாளராக அங்கீகரிக்க கோரி இந்திய தேர்தல் ஆணையத்திடம் அதிமுகவினர் இன்று கோரிக்கை வைக்க உள்ளனர்.
நேற்று உச்சநீதிமன்றம் அதிமுக பொதுக்குழு வழக்கில் முக்கிய உத்தரவை பிறப்பித்தது. கடந்த ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவை செல்லும் என அறிவித்த சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது உச்சநீதிமன்றம்.
பொதுக்குழு தீர்மானம் : இந்த உத்தரவை அடுத்து ஜூலை 11 எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை அடுத்து அந்த பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும் செல்லும் என எடப்பாடி பழனிசாமி அணியினர் கூறி அதிமுக இடைக்கால பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமியை கொண்டாடி வருகின்றனர்.
இபிஎஸ் அணி : இந்நிலையில், இந்த உச்சநீதிமன்ற தீர்ப்பு நகலை இன்று அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகம் உள்ளிட்ட எடப்பாடி அணியினர் இந்திய தேர்தல் ஆணையம் செல்ல உள்ளனர்.
முறையீடு : முன்னதாக உச்சநீதிமன்ற வழக்கு நிலுவையில் இருந்ததை சுட்டிக்காட்டி இந்திய தேர்தல் ஆணையம் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என முழுதாக அங்கீகரிக்காமல் இருந்தது. ஆதலால், இந்த உச்சநீதிமன்ற தீர்ப்பு நகலை தேர்தல் ஆணையத்திடம் கொடுத்து அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என அங்கீரித்து ஒப்புதல் வழங்க கோரிக்கை வைக்கப்பட உள்ளது.
உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி விட்டதால், எப்படியும் இந்திய தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிசாமியை அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக அங்கீகரிக்கும் என கூறப்படுகிறது.
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…