அ.தி.மு.க. அரசின் ஊழல்களை பட்டியலிடுங்கள் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,பா.ஜ.க.வை முறைத்தால், எந்த நேரத்தில் வருமான வரித்துறை ரெய்டு வரும், எந்த நேரத்தில் அமலாக்கத்துறை ரெய்டு வரும், எந்த நேரத்தில் சி.பி.ஐ. வழக்கு வரும் என்று தெரியாது. ஆகவே அரண்டு மிரண்டு தமிழகத்தின் உரிமைகளை அடகு வைக்கிறார் எடப்பாடி பழனிசாமி. விவசாயிகளின் உரிமைகளை அடகு வைக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
இதுபோன்ற அ.தி.மு.க. அரசின் துரோகங்களை – அமைச்சர்களின் ஊழல்களைக் களத்திற்குக் கொண்டு போகும் காளையர்கள்தான் திமுகவினர்.
அந்த நம்பிக்கையில்தான், இன்றைக்கு அ.தி.மு.க.வின் ஊழலை ஊரெங்கும் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறோம். சட்டமன்றத் தேர்தல் சிறப்புக் கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற்று வருகிறது.ஒவ்வொரு கூட்டத்திலும் ஆயிரக்கணக்கான தொண்டர்களை மட்டுமல்ல – மக்களையும் சந்தித்து வருகிறேன். நேற்றைய தினம் செய்தியைப் பார்த்திருப்பீர்கள். கழகத்தின் “தமிழகம் மீட்போம்” என்ற தேர்தல் சிறப்புக் கூட்டத்தை ஒரு கோடிப் பேர் பார்த்திருக்கிறார்கள். இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் – தி.மு.க.வுடன் சேர்ந்து தமிழகத்தை மீட்க மக்கள் தயாராகி விட்டார்கள். அந்தப் பணியில் நான் தொடர்ந்து அயராது உழைக்க வேண்டும்!
தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு வாக்காளரையும் நாம் பார்க்க வேண்டும். அ.தி.மு.க. அரசின் ஊழல்களை – எடப்பாடி பழனிசாமி அவர்களின் தோல்விகளை – பா.ஜ.க. தமிழகத்திற்குச் செய்துள்ள பச்சைத் துரோகத்தைப் பட்டியலிடுங்கள்.ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவருக்கு வேலை கிடைக்க, ஒவ்வொரு வீட்டிலும் வருமானம் பெருக, ஒவ்வொரு மாவட்டமும் தொழில் வளர்ச்சியில் ஒன்றையொன்று மிஞ்சிச் செல்ல – அ.தி.மு.க. ஆட்சியாளர்களை வீட்டுக்கு அனுப்புவோம்.இவ்வாறு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி : தமிழ்நாடு தொழில்துறை சார்பில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மினி டைடல் பார்க் அமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில்…
மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது , பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியுடன் பார்டர்…
தென் கொரியா : சின்சான்ஜி கிறிஸ்தவ சபையானது, 1984-ல் தென் கொரியாவின் சியோலில் தொடங்கப்பட்டது. அதன் பின்னர் சர்வதேச அளவில்…
விழுப்புரம் : நேற்று விழுப்புரம் மாவட்டம் பட்டானூரில் சங்கமித்ரா திருமண மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சி பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.…
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை நடந்த…
புதுச்சேரி : புதுச்சேரி மாநில அரசின் வருவாயை அதிகரிக்கும் நோக்கில், மத்திய அரசு புதுச்சேரி மாநிலத்தில் பெட்ரோல் டீசலுக்கு விதிக்கும்…