தமிழகத்தில், மீண்டும் அ.தி.மு.க., ஆட்சி அமைக்க வேண்டி, திருவில்லிபுத்துார் ஆண்டாள் கோவிலில் சிறப்பு யாகம் நடத்தியுள்ளனர்.
அண்ணா திராவிட முன்னேற்ற கழக இளைஞர் பாசறை மாநில துணை செயலர், கோவை விஷ்ணுபிரபு என்பவர், நேற்று காலை, 10:45 மணிக்கு மனைவி, மகன் உட்பட ஐந்து பேருடன், தனி ஹெலிகாப்டரில் திருவில்லிபுத்துார், சி.எம்.எஸ்., பள்ளி மைதானத்தில் வந்து இறங்கினார். அங்கிருந்து, காரில் ஆண்டாள் கோவில் சென்று தரிசனம் செய்தனர். சக்கரத்தாழ்வார் சன்னிதியில், ஜெயலலிதா படத்துடன், ரகுபட்டர் தலைமையில் நடந்த சுதர்சன யாகத்தில் பங்கேற்றனர். யாகத்தில், உள்ளூர் கட்சி பிரமுகர்கள் யாரும் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து அண்ணா திராவிட முன்னேற்ற கழக இளைஞர் பாசறை மாநில துணை செயலர் விஷ்ணுபிரபு கூறுகையில், ”சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., வெற்றி பெறவும், முதல்வர் இ.பி.எஸ்., துணை முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையில் ஆட்சி தொடரவும், கொரோனா ஒழிந்து, மக்கள் சுபிட்சமுடன் வாழவும் பிரார்த்தனை செய்தோம்,” என்றார்.
சென்னை : 18-வது ஐபிஎல் சீசன் இந்த ஆண்டு வருகின்ற 22-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி வரும் மே 25-ஆம்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - சட்டப் பேரவை உறுப்பினர் செங்கோட்டையன் இடையே அதிருப்தி நிலவுவதாக சமூக…
டெல்லி : ஐபிஎல் 2025 சீசன் இன்னும் ஒரு வாரத்திற்குள் தொடங்கவுள்ள நிலையில், வரப்போகும் இரண்டு மாத கால கிரிக்கெட்…
சென்னை : 2025 - 2026 ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து, பல்வேறு புதிய…
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் ஜூன் மாதம் முதல் சர்வதேச…
சென்னை : தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக்கொள்கை வழியாக மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக தொடர்ந்து திமுக அரசு…