தேர்தலில் அடைந்த பின்னடைவு குறித்து அதிமுக அமைச்சர்கள் மாற்றும் அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் அக்கட்சியின் ஒருங்கமைப்பாளர்களான ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இருவரும் இனைந்து ஆலோசனை நடத்தியதாகத் தற்போது தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் அப்போதய முதல்வர் ஜெ.ஜெயலலிதா தலைமையிலான அதிமுக கட்சி தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சுமார் 90 சதவீத வெற்றியைப் பெற்றது. அதிலும் குறிப்பாக ஊராட்சி ஒன்றியங்களில் 60 சதவீதத்துக்கு மேற்பட்ட இடங்களையும், மாநகராட்சிகளில் 100 சதவீதம் என்ற வெற்றியைப் பெற்றது. ஆனால் இந்த முறை உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக ஆளுங்கட்சி என்பதால் பெரிய அளவில் வெற்றியை ஈட்டும் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் 27 மாவட்டக் கவுன்சில்களில் 13 மாவட்டக்கவுன்சில்களை திமுகவிடம் பறிகொடுத்தது. ஊராட்சி ஒன்றிய இடங்களில் திமுக 60 சதவீதத்துக்கு மேல் கைப்பற்றியுள்ளது. எப்பொழுதும் மேற்கு மாவட்டங்களிலும், தென் மாவட்டங்களிலும் வலுவாக இருக்கும் அதிமுக, இந்த முறை தென்மாவட்டங்களில் பலவற்றை இழந்துள்ளது. இந்த பின்னடைவு குறித்து இரட்டை குழல் துப்பாக்கி எனப்படும் ஒபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆலோசனை நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆலோசனை அதிமுக கட்சியின் தொண்டர்களுக்கு உத்வேகத்தை அளிப்பதாக அந்த கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…