எம்.ஜி.ஆர். விழாவுக்கு தயாரான போது கட்சி கொடியே காலனாக மாறிய பரிதாபம்.. அதிமுக நிர்வாகி பரிதாப மரணம்..

Default Image
  • கட்சி கொடியை பழுது பார்த்தபோது மின்சாரம் தாக்கி கட்சி நிர்வாகி பலி.
  • அதிமுக கட்சியினரிடையே சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்.

திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை அருகே ராமகிரி என்ற பகுதியை சேர்ந்தவர் வடிவேல், இவரது வயது 50.இவர்  ராமகிரி 15வது வார்டு அதிமுக கிளை செயலாளராக இருந்து வருகிறார். இவரது மனைவி திலகவதி, இவருக்கு வயது 46.இவர்  குஜிலியம்பாறை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க நிர்வாகக்குழு உறுப்பினராக இருந்து வந்தார்.இந்நிலையில்  நேற்று ராமகிரியில் நடக்கவிருந்த எம்ஜிஆர் பிறந்தநாள் விழாவில் அதிமுக கட்சிக்கொடியை ஏற்றுவதற்காக அங்கிருந்த கொடி கம்பத்தை  கழற்றி வண்ணம் தீட்டி  புதுப்பித்துள்ளார் வடிவேல்.

Related image

பின் வடிவேல், திலகவதி, இவர்களது மகள் நாகேஸ்வரி  ஆகியோர் சேர்ந்து அதிமுக கொடிக்கம்பத்தை அதே இடத்தில் ஊன்றியுள்ளனர். அப்போது அருகேயுள்ள உயரழுத்த மின்கம்பி மீது கொடி மரம் பட்டது. இதில் மின்சாரம் பாய்ந்து 3 பேரும் அங்கிருந்து தூக்கி வீசப்பட்டனர். சம்பவம் நடந்த இடத்திற்க்கு  அருகில் இருந்தவர்கள் 3 பேரையும் மீட்டு குஜிலியம்பாறை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள்  திலகவதி இறந்து விட்டதாக  தெரிவித்தனர். மேலும் இவரது கணவர் வடிவேல், மற்றும் மகள்  நாகேஸ்வரி தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து குஜிலியம்பாறை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து  விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்