அதிமுகவில் தொடரும் நீக்கம் !அதிமுக தலைமை அதிரடி …..
அதிமுகவில் இருந்து 150க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் அதிரடியாக நீக்கப்பட்டனர்.
இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுகவின் கொள்கை மற்றும் கோட்பாடுகளுக்கு முரணாக செயல்பட்டதால், அவர்கள் நீக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர். அதிமுகவின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதால், விழுப்புரம் வடக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைத் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான வானூர் கணபதி உள்பட 100க்கும் மேற்பட்ட நிர்வாகிகளும், கடலூர் கிழக்கு மாவட்டத்தில் சுமார் 40 நிர்வாகிகளும் நீக்கப்படுவதாக அறிவித்துள்ளனர்.
இதற்கு முன் நேற்று தஞ்சை மாவட்டத்தில் 407 பேர் உட்பட, 521 தினகரன் ஆதரவாளர்கள் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை 800-க்கும் மேற்பட்டவர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், நேற்று 521 பேரை நீக்கி கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் கே.பழனிசாமி ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர்.
இதுவரை 800-க்கும் மேற்பட்டவர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், நேற்று 521 பேரை நீக்கி கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் கே.பழனிசாமி ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர்.
இதில், மத்திய காஞ்சிபுரம், திருவள்ளூர் கிழக்கு, திருவள்ளூர் மேற்கு, மதுரை மாநகர், சிவகங்கை, நெல்லை மாநகர், தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர். சேலம் புறநகர் மாவட்டத்தைச் சேர்ந்த வீரபாண்டி தொகுதி முன்னாள் எம்எல்ஏ எஸ்.கே.செல்வம், பாப்பநாயக்கன்பட்டி முன்னாள் எம்எல்ஏ பி.சரோஜா உள்ளிட்ட 107 பேர் நீக்கப்பட்டுள்ளனர்.
மேலும், தஞ்சை தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக விவசாயிகள் பிரிவுத் தலைவர் துரை கோவிந்தராஜன், வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் தங்கப்பன் உள்ளிட்ட 407 பேர் ஒரே நாளில் நீக்கப்பட்டுள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள் …