தமிழகத்தில் 2016-ம் ஆண்டு முதல் எத்தனை டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன என்பது குறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு.
புதுக்கோட்டை சார்ந்த கருப்பையா என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், அரசர்குளம் கிராமத்தில் இயங்கி வந்த டாஸ்மாக் கடை பொதுமக்கள் எதிர்ப்பு காரணமாக மூடப்பட்டது.
தற்போது அந்த கடையை அறந்தாங்கி- காரைக்குடி நெடுஞ்சாலையில் சோதனைச் சாவடி அருகே திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இப்பகுதியில் பள்ளிகள், கோயில்கள் உள்ளன. இங்கு கடை திறந்தால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் எனவே டாஸ்மாக் திறக்க தடை விதிக்க வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தேர்தல் அறிக்கையில் தமிழகத்தில் 5 ஆண்டுகளில் படிப்படியாக டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை ஆளுங்கட்சி நிறைவேற்றியதா..? என கேள்வி எழுப்பினர்.
மேலும், 2016-ம் ஆண்டு எத்தனை டாஸ்மாக் கடைகள் இருந்தன..? 2017, 18, 19ம் ஆண்டுகளில் எத்தனை கடைகள் மூடப்பட்டன..? தற்போது எத்தனை டாஸ்மாக் கடைகள் உள்ளன..? அதன் மூலம் வருவாய் எவ்வளவு வருகிறது..? என்பது குறித்து தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும், வழக்கை வருகின்ற நவம்பர் 8-ம் தேதி ஒத்திவைத்தும், அறந்தாங்கி- காரைக்குடி நெடுஞ்சாலையில் சோதனைச் சாவடி அருகே திறக்க இடைக்கால தடை விதித்தது.
சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம், இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்…
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி வருகிறது.…
சென்னை : சென்னை முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். …
ஜெர்மனி : உலகப் புகழ் பெற்ற செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சன் ஜெர்மனியில் உள்ள வைஸ்ஸென்ஹாஸில் நடைபெறும் பிளைண்ட்ஃபோல்டு ஃப்ரீஸ்டைல்…
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி…
சென்னை : கடந்த 10 மாதங்களாக வீட்டு உபயோக சமையல் சிலிண்டர் விலை உயர்த்தப்படாமல் இருந்த நிலையில் நேற்று (ஏப்ரல் 7)…