அதிமுகவினர் ஒருபக்கம் உண்ணாவிரதம் என்று சொல்லிவிட்டு மறுபுறம் உண்ணும் விரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் உள்ள 32 மாவட்ட தலைநகரங்களில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து இன்று அ.தி.மு.க. உண்ணாவிரத போராட்டம் நடத்துகிறது. புதுச்சேரி, காரைக்காலிலும் இதே போராட்டம் தொடர்கிறது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டும், அதை நிறைவேற்றாமல் மத்திய அரசு காலம்தாழ்த்தி வருகிறது. எனவே, மத்திய அரசை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் மாவட்ட தலைநகரங்களில் இன்று (செவ்வாய்க்கிழமை) உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள 32 மாவட்ட தலைநகரங்களிலும் உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்போர் பட்டியல் அ.தி.மு.க. தலைமைக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டது. தமிழகம் மட்டுமல்லாமல், புதுச்சேரி, காரைக்காலிலும் அ.தி.மு.க. அறிவித்த உண்ணாவிரத போராட்டம் அங்குள்ள நிர்வாகிகள் தலைமையில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.
சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே இன்று அ.தி.மு.க. உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது. காலை 8 மணியில் இருந்து மாலை 5 மணி வரை இந்தப் போராட்டம் தொடர்கிறது. இதில், அ.தி.மு.க. அவைத் தலைவர் இ.மதுசூதனன், மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், அமைப்பு செயலாளர் எஸ்.கோகுல இந்திரா, மாவட்ட செயலாளர்கள் நா.பாலகங்கா, தி.நகர் சத்தியா, வி.என்.ரவி, டி.ஜி.வெங்கடேஷ்பாபு, ஆர்.எஸ்.ராஜேஷ் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.
இதேபோல், திருவள்ளூர், காஞ்சீபுரம், திருச்சி, தஞ்சாவூர், சேலம், கன்னியாகுமரி, திண்டுக்கல், ஈரோடு, தேனி, திருப்பூர், நாமக்கல், கோவை, விழுப்புரம், கடலூர், ராமநாதபுரம், திருவாரூர், நெல்லை, சிவகங்கை, மதுரை, தர்மபுரி, நாகப்பட்டினம், நீலகிரி, கரூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, வேலூர், தூத்துக்குடி, திருவண்ணாமலை, விருதுநகர், கிருஷ்ணகிரி ஆகிய நகரங்களிலும் இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது.
இந்த போராட்டங்களில், அந்தந்த மாவட்ட அமைச்சர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.தற்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி நடைபெறும் உண்ணாவிரதத்தில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில் வேலூரில் அதிமுக உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. போராட்டம் நடந்த இடத்தற்கு அருகில் தக்காளி சாதம், தயிர் சாதம், லெமன் சாதம் வழங்க ஏற்பாடு செய்திருந்தார் மேற்கு மாவட்ட தகவல் தொழில் நுட்ப பிரிவு நிர்வாகி ஒருவர். குழு குழுவாக பந்தலில் இருந்த தொண்டர்கள், நிர்வாகிகள் வந்து, சாப்பிட்டுவிட்டு சென்றனர்.ஒருபக்கம் உண்ணாவிரதம் என்று சொல்லிவிட்டு மறுபுறம் உண்ணும் விரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
திருப்பதி : திருமலை திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி தரிசனத்துக்கான டோக்கன் வழங்கும் மையங்களில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக தமிழகத்தை சேர்ந்த…
கடலூர் : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று கடலூர் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை…
திருப்பதி : ஏழுமலையான கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி ஜனவரி 10 முதல் 19 வரை சொர்க்கவாசல் திறந்திருப்பதால் தரிசனம் செய்வதற்கான…
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை இணைக்கும் செயல்முறையாக பார்க்கப்படும் ஸ்பேஸ் டாக்கிங் செயல்முறைக்காக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ…
கடலூர் : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடலூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் தந்தை பெரியார் பற்றி பல்வேறு…
நியூ யார்க் : 2016 அமெரிக்க தேர்தல் சமயத்தில் நடிகைக்கு டொனால்ட் டிரம்ப் பணம் கொடுத்ததாகவும், அதனை தனது நிதி…