அதிமுக கொடிக்கம்ப விவகாரம்.! ஓபிஎஸ் – இபிஎஸ் தரப்பினர் இடையே மோதல்.! 

OPS - EPS ADMK Flag issue

இன்று ஜனவரி 17ஆம் தேதி மறைந்த முன்னாள் முதல்வரும் , அதிமுக தலைவருமான எம்.ஜி.ஆரின் 107வது பிறந்தநாளை அதிமுக தொண்டர்கள் , ஓபிஎஸ் ஆதரவாளர்கள், டிடிவி.தினகரன், சசிகலா தரப்பினர் என பலரும் கொண்டாடி வருகின்றனர். இந்த கொண்டாட்டத்தின் போது ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பினர் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.

ஓ.பன்னீர்செல்வமும், நானும் இணைந்து செயல்பட உள்ளோம் – டிடிவி தினகரன்

தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் உள்ள பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அதிமுக கொடி கம்பத்தில் கொடியேற்ற எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் ஏற்பாடு செய்து இருந்தனர் என கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் அதிமுக கொடியேற்றியதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக இரு தரப்பினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கு வந்த முன்னாள் அதிமுக எம்பி பார்த்திபன் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஏற்றிய கொடிக்கம்பத்தை பலமாக அசைத்ததால் அங்கு மீண்டும் இரு தரப்பினர் இடையேயான மோதல் போக்கு பெரிதானது. அப்போது அங்கிருந்த வடகறை காவல் நிலையத்தை அதிகாரிகள் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து அங்கு பெரிய அளவில் மோதல் ஏற்படாதவாறு தடுத்து நிறுத்தி அனுப்பி வைத்தனர்.

எம்ஜிஆர் பிறந்தநாளில் ஓபிஎஸ் – இபிஎஸ் இடையேயான இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட இந்த மோதல் அங்கு பெரும் பதற்றம் உருவானது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்