கூவத்தூர் விவகாரம்.. அவதூறு பேச்சு.! ஏ.வி.ராஜுவுக்கு வக்கீல் நோட்டீஸ்.! 

AV Raju - Koovathur Issue

சேலம் மாவட்ட முன்னாள் அதிமுக நிர்வாகி ஏ.வி.ராஜு அண்மையில் ஒரு வீடியோவில் , 2017இல் அதிமுக எம்எல்ஏக்கள் இருந்த கூவத்தூர் ரெசார்ட் தொடர்பாக பல்வேறு சர்ச்சை கருத்துக்களை கூறி அதிரவைத்தார். அதில் பிரபல நடிகை பற்றியும், அதிமுக நிர்வாகிகள் பற்றியும் பல்வேறு அவதூறு கருத்துக்களை கூறினார்.

ஏ.வி.ராஜு கூறிய கருத்துக்கு அரசியல் வட்டாரம், சினிமாதுறையினர் என பலர் தங்கள் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். மேலும் ஏ.வி.ராஜு மீது காவல்துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற குரல்களும் வலுத்து வருகின்றன.

அவதூறு பேச்சு… அருவருப்பாக இருக்கு! நடிகை த்ரிஷா ஆவேசம்!!

ஏ.வி.ராஜு பேசிய வீடியோவில், சேலம் மாவட்ட அதிமுக நிர்வாகி வெங்கடாச்சலம் பற்றியும் பேசியிருந்தார். இதனை தொடர்ந்து தற்போது வெங்கடாச்சலம் சார்பில் வக்கீல் நோட்டீஸ் ஏ.வி.ராஜுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

அதில், ஏ.வி.ராஜு பேசிய அவதூறு கருத்துக்கள் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டதாகவும், அதனால், தான் மட்டுமின்றி தனது குடும்பத்தினரும் கடுமையான மனஉளைச்சலுக்கு உள்ளாகி இருப்பதாகவும். அதனால் 24 மணிநேரத்திற்குள் ஏ.வி.ராஜு பொது இடத்தில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், இல்லையென்றால் சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்