பாஜக தலைவர் அண்ணாமலையுடன் இபிஎஸ் தரப்பினர் பேச்சுவார்த்தை.!
பாஜக தலைமை அலுவலகமான கலாமலாயத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையுடன் அதிமுக இபிஎஸ் தரப்பினர் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைதேர்தல் பணிகளை திமுக , அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் , மற்ற கட்சிகள் என தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இதில் காங்கிரஸ் – அதிமுக நேரடி மோதலில் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிமுக சார்பில் இபிஎஸ் தரப்பினர் தங்களது கூட்டணி கட்சியினரிடம் ஆதரவு கேட்டு வருகின்றனர். இந்நிலையில், தற்போது பாஜக தலைமை அலுவலகமான கலாமலாயத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையுடன் அதிமுக இபிஎஸ் தரப்பினர் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.