அ.தி.மு.கவுக்கு தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் காவிரி மேலாண்மை வாரியம் அமைய வேண்டும் என்றால் மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தை ஆதரிப்பது குறித்து துணிச்சலோடு முடிவெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
வாக்குறுதிப்படி சிறப்பு அந்தஸ்தை வழங்க மறுத்த மத்திய பா.ஜ.க. அரசைக் கண்டித்து ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அமைச்சர்களை திரும்பப் பெற்றுக் கொண்டதையும், கூட்டணியிலிருந்து விலகியதையும் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தமது அறிக்கையில் சுட்டிக்காட்டிள்ளார். இந்த நிலையில் ஆறு வார காலத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தும், உச்சநீதிமன்றத் தீர்ப்பையே மத்திய அரசு மதிக்கத் தவறியிருப்பதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மாநில உரிமைகளை நிலைநாட்ட மக்களவையில் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதை சுட்டிக்காட்டியுள்ள ஸ்டாலின், காவிரி மேலாண்மை வாரியம் தீர்ப்பு தேதியிலிருந்து 6 வாரங்களுக்குள் அமைய வேண்டும் என்ற உளப்பூர்வ எண்ணம் இருந்தால், மக்களவையில் 3-வது பெரிய கட்சி எனக் கூறிக்கொள்ளும் அதிமுக அந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தை ஆதரிக்கும் முடிவை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
காவிரி, நீட் உள்ளிட்ட விவகாரங்களில் தமிழ்நாட்டு உரிமையை நிலைநாட்டும் எண்ணம் கொண்டிருந்தால் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவளிப்பதாக துணிச்சலோடு அறிவித்து, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரிய நடிகர்களுடைய படங்கள் வெளியாகவில்லை என்றாலும், தீபாவளியைத் தரமாகவும் குடும்பத்துடனும்…
பஞ்சாப் : ஆஸ்திரேலியா அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் கிளன் மேக்ஸ்வெல் நடந்து முடிந்த 2017 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு…
சென்னை : நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு என்ன படம் பார்க்கலாம் என்று தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு விருந்தாக ரப்பர்…
சென்னை : இன்று முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தியை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் பலரும் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர்…
சென்னை : மிகவும் எதிர்பார்க்கப்பட்டநயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியரின் திருமண ஆவணப்படமான ஆவணப்படமான "நயன்தாரா - பியோண்ட் தி…
அயோத்தி : தீபாவளியை முன்னிட்டு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் செய்த காரியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அயோத்தி ராமர்…